கூந்தல் நீளம் இடுப்புக்கு கீழ் இருக்க ஆசையா? அப்போ செம்பருத்தி பூவை இப்படி பயன்படுத்துங்கள்!!

0
31
#image_title

கூந்தல் நீளம் இடுப்புக்கு கீழ் இருக்க ஆசையா? அப்போ செம்பருத்தி பூவை இப்படி பயன்படுத்துங்கள்!!

இன்றைய காலத்தில் குழந்தைகள், பெரியவர்கள் என்று அனைவரையும் பாதிக்கக் கூடிய பிரச்சனையாக இருப்பது தலை முடி உதிர்தல். இதற்கு முக்கிய காரணம் பொடுகு. இந்த பிரச்சனையை கண்டு கொள்ளாமல் விட்டோம் என்றால் முடி உதிர்வு, தலையில் அரிப்பு, வழுக்கை, தோல் வியாதிகள் உள்ளிட்டவை நிகழ தொடங்கும். முடி அதிகளவில் உதிர காரணமாக இருக்கும் பொடுகு பிரச்சனையானது வறண்ட சருமம், மன அழுத்தம், முறையற்ற உணவு பழக்கம் போன்றவைகளால் ஏற்படுகிறது.

தேவையான பொருட்கள்:-

*செம்பருத்தி பூ – 5 முதல் 7

*பெரு நெல்லி – 1 கைப்பிடி அளவு (உலர்த்தியது)

*வெள்ளை உளுந்து – 2 கைப்பிடி அளவு

செய்முறை:-

முதலில் 5 முதல் 6 பெரு நெல்லிக்காயை வெயிலில் காயவைத்து கொள்ளவும். பின்னர் ஒரு பாத்திரத்தில் உலர்த்திய பெரு நெல்லியை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி சேர்த்துக் கொள்ளவும்.

அடுத்து செம்பருத்தி பூ 5 முதல் 7 வரை எடுத்து அதன் இதழ்களை பிரித்துக் கொள்ளவும். இந்த இதழ்களை பெரு நெல்லி வைத்துள்ள பாத்திரத்தில் போட்டுக் கொள்ளவும்.

அடுத்து 1 கைப்பிடி அளவு வெள்ளை உளுந்தை அதில் சேர்த்து கொள்ளவும். இந்த மூன்று பொருட்களும் மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி 1 நாள் முழுவதும் ஊற விடவும்.

மறுநாள் காலையில் ஊற வைத்துள்ள கலவையை மிக்ஸி ஜாரில் போட்டு மைய்ய அரைத்து பேஸ்ட் பதத்திற்கு கொண்டு வரவும். பின்னர் இதை ஒரு பவுலுக்கு மாற்றிக் கொள்ளவும்.

அடுத்து ஒரு காட்டன் துணியில் அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து ஒரு பவுலுக்குசாறு பிழிந்து கொள்ளவும்.

பிறகு இந்த சாற்றை தலை முடிகளின் வேர்காள் பகுதியில் படும்படி அப்ளை செய்து 20 முதல் 30 நிமிடங்களுக்கு ஊற விடவும். பின்னர் கூந்தலுக்கு சீகைக்காய், அரப்பு போன்றவற்றை பயன்படுத்தி அலசிக் கொள்ளலாம். இவ்வாறு வாரத்திற்கு 2 அல்லது 3 முறை செய்து வந்தோம் என்றால் முடி அடர்த்தி அதிகரித்து நீளமாகி நீளமாக வளரும்.