கேரளா ஸ்டைல் ரெசிபி: இப்படி செய்தால் நேந்திரங்காய் தோல் கறி அசத்தல் சுவையில் இருக்கும்!!

0
39
#image_title

கேரளா ஸ்டைல் ரெசிபி: இப்படி செய்தால் நேந்திரங்காய் தோல் கறி அசத்தல் சுவையில் இருக்கும்!!

நேந்திர வாழை வாழையின் தோலில் அதிக சத்துக்கள் நிறைந்து இருக்கிறது. இந்த தோலை நறுக்கி வேக வைத்து சமைத்து சாப்பிடுவதை கேரள மக்கள் வழக்கமாக கொண்டிருக்கின்றனர்.

தேவையான பொருட்கள்:-

*நேந்திரங்காய் – 2

*தேங்காய் – 1/2 மூடி (துருவியது)

*பச்சை மிளகாய் – 4

*புளி – நெல்லிக்காய் அளவு (கரைத்து கொள்ளவும்)

*தேங்காய் எண்ணெய் – 2 தேக்கரண்டி

*கடுகு, உளுத்தம் பருப்பு – 1 தேக்கரண்டி

*உப்பு – தேவையான அளவு

*மஞ்சள்தூள் – தேவையான அளவு

செய்முறை:-

முதலில் இரண்டு நேந்திரங்காயின் தோலை தனியாக எடுத்துக் கொள்ளவும். பின்னர் அதனை தண்ணீர் கொண்டு சுத்தம் செய்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

அடுத்து 1/2 மூடி தேங்காயை துருவல் கொண்டு துருவிக் கொள்ளவும். பிறகு மிக்ஸி ஜாரில் துருவி வைத்துள்ள தேங்காய், 4 பச்சை மிளகாய் சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் அரைக்கவும்.

அடுத்து அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் நறுக்கி வைத்துள்ள நேந்திரங்காய் தோலை சேர்க்கவும். பின்னர் வேக வைக்க சிறிதளவு மஞ்சள்தூள் சேர்க்கவும்.

அடுத்து தயார் செய்து வைத்துள்ள புளிக் கரைசல் தேவையான அளவு உப்பு சேர்த்து கொதி விடவும். பின்னர் அரைத்து வைத்துள்ள தேங்காய் + பச்சை மிளகாய் விழுதை சேர்த்து கெட்டி தன்மை வரும் வரை கொதிக்க விட்டு இறக்கவும்.

அடுத்து அடுப்பில்’தாளிப்பு கரண்டி வைத்து அதில் 2 தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் ஊற்றவும். அவை சூடேறியதும் 1 தேக்கரண்டி கடுகு, உளுந்து சேர்த்து பொரிய விட்டு அடுப்பை அணைக்கவும்.

இந்த தாளிப்பு கலவையை தயார் செய்து வைத்துள்ள நேந்திரங்காய் தோல் கறியில் சேர்த்து கிளறி விடவும். இவை சூடான சாதத்திற்கு சிறந்த காமினேஷனாக இருக்கும்.