Kerala Style Recipe: கேரளா ஸ்பெஷல் “அரசி பாயசம்” – சுவையாக செய்வது எப்படி?

0
166
#image_title

Kerala Style Recipe: கேரளா ஸ்பெஷல் “அரசி பாயசம்” – சுவையாக செய்வது எப்படி?

நமக்கு மிகவும் பிடித்த அறுசுவை உணவுகளில் ஒன்று இனிப்பு. இதில் பல்வேறு உணவு வகைகள் இருக்கிறது. இந்த இனிப்பு வகைகளில் ஒன்று பாயசம். இதில் பால் பாயசம், ஜவ்வரிசி பாயசம், பாசிப்பயறு பாயசம், அவல் பாயசம் என்று பல வகைகள் இருக்கிறது. அதில் ஒன்று தான் இந்த அரசி பாயசம். அரசி வைத்து தயாரிக்கப்டும் இந்த பாயசம் கேரளா மக்களின் விருப்ப இனிப்பு வகை ஆகும்.

தேவையான பொருட்கள்:-

*அரிசி – 1 கப்

*பால் – 4 கப்

*சீனி – 1 கப்

*ஏலக்காய் பொடி – 1/4 தேக்கரண்டி

* உப்பு – 1 சிட்டிகை

செய்முறை:-

அதிக சுவையில் இருக்கும் இந்த பாயசத்தை செய்ய முதலில் அரிசி 1 கப் அளவு எடுத்து ஜாரில் போட்டு கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

பின்னர் அரைத்த அரிசியை ஒரு பவுலில் சேர்த்து தண்ணீர் ஊற்றி ஊற வைக்கவும்.

அடுத்ததாக பாயசம் செய்வதற்காக அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து 4 கப் காய்ச்சாத பாலை ஊற்றி மிதமான தீயில் ஐந்து நிமிடங்கள் கொதிக்க விடவும்.

அடுத்து அரைத்து ஊற வைத்துள்ள அரிசியை கொதிக்கும் பாலில் சேர்த்து வேக விடவும்.

பாலில் அரசி நன்கு வெந்து வந்ததும் சுவைக்காக 1 கப் அளவு சர்க்கரை சேர்த்து கிளறி விடவும்.
அடுத்து சிட்டிகை அளவு உப்பு மற்றும் 1/4 தேக்கரண்டி அளவு ஏலக்காய்த்தூள் சேர்த்து கிளறி அடுப்பை அணைக்கவும். இது தான் கேரளா ஸ்டைல் அரசி பாயசம் ஆகும். இந்த முறையில் செய்தால் அதிக சுவை மற்றும் வாசனையுடன் இருக்கும்.

Previous articleசொந்த வீடு விரைவில் கட்ட அல்லது வாங்க ஆசைப்படுபவரா நீங்கள்… அப்போ இதை முதலில் செய்யுங்கள்!!
Next articleநீங்கள் கர்ப்பிணி பெண்ணா? அப்போ இதை தெரிந்து கொள்ளுங்கள்!!