நீங்கள் கர்ப்பிணி பெண்ணா? அப்போ இதை தெரிந்து கொள்ளுங்கள்!!

0
47
#image_title

நீங்கள் கர்ப்பிணி பெண்ணா? அப்போ இதை தெரிந்து கொள்ளுங்கள்!!

கர்ப்பிணிகள் இதை எல்லாம் கட்டாயம் செய்யக் கூடாது.

*கோயிலில் சூரைத் தேங்காய் உடைக்கக் கூடாது.

*வீட்டில் பண்டிகை நாட்களில் தேங்காய் உடைத்து கற்பூரம் ஏற்றக் கூடாது.

*உள்ளூர் கோயிலில் திருவிழாவிற்கு கொடி ஏற்றி விட்டால் வெளியூருக்கு போகக் கூடாது.

*எந்தக் கோயிலுக்கும் மஞ்சள் துணியில் காணிக்கை முடிந்து நேர்த்திக் கடன் வைக்கக் கூடாது.

*வசிக்கும் வீட்டை காலி செய்து வேறு வீட்டுக்கு போகக் கூடாது.

*சமையலுக்கு கூட பூசணிக்காய், எலுமிச்சம் பழத்தை நறுக்க கூடாது.

*கடலில் மூழ்கி குளித்து எழக் கூடாது. கர்ப்பிணி பெண்ணின் கணவரும் இதை செய்யக் கூடாது.

*கர்ப்பிணி பெண்ணின் கணவர் தலை முடி வெட்டக் கூடாது. ட்ரிம் செய்ய கூடாது. மொட்டை அடிக்க கூடாது.

*தண்ணீரில் தன் உருவத்தை பார்க்கக் கூடாது.

*புதுத் துணி வாங்கினால் கர்ப்பிணி பெண்கள் அதை அலசாமல் போடக் கூடாது. தண்ணீரில் அலசித் தான் உடுத்த வேண்டும்.

*கர்ப்பிணி பெண்கள் குளவி கூடு, தேன் கூடு போன்ற எதையும் கலைக்கக் கூடாது. கர்ப்பிணி பெண்ணின் கணவரும் இதை செய்யக் கூடாது.

*பால் சங்கு, தொட்டில் கயிறு, தொட்டில் புதுத் துணிகள் என்று எதையும் குழந்தைக்காக முன் கூட்டியே வாங்கி வைக்கக் கூடாது.

*உரல், அம்மிக்கல்லில் கர்ப்பிணி பெண்கள் உட்காரக் கூடாது. அதேபோல் நிலைவாசல் படியில் உட்காரக் கூடாது.

*உக்கிரம் நிறைந்த கடவுள் உள்ள கோயிலுக்கு செல்லக் கூடாது.