Kerala Style Recipe: கேரளா ஸ்பெஷல் கட்டஞ்சாயா – செய்வது எப்படி?

0
50
#image_title

Kerala Style Recipe: கேரளா ஸ்பெஷல் கட்டஞ்சாயா – செய்வது எப்படி?

நம் அனைவருக்கும் கட்டஞ்சாயா மிகவும் பிடித்த பானம். இவை உடலுக்கு ஆரோக்கியத்தை அள்ளி கொடுப்பவகையாக உள்ளது. பால் டீ, காப்பி செய்து பருகுவதற்கு பதில் சாயா செய்து பருகுவது நல்லது. இந்த சாயாவை கேரளா ஸ்டைலில் செய்தால் குடிக்க மிகவும் சுவையாகவும், ஆரோக்கியம் நிறைந்த ஒன்றாகவும் இருக்கும்.

கட்டஞ்சாயா பருகுவதால் உடலுக்கு கிடைக்கும் பயன்கள்:-

*செரிமான கோளாறு நீங்கும்

*கொலஸ்ட்ரால் அளவை குறைக்க உதவும்

*பல் சொத்தை தடுக்க உதவும்

*சிறுநீரக கோளாறு சரி செய்ய உதவும்

கேரளா ஸ்பெஷல் கட்டஞ்சாயா செய்யும் முறை:-

தேவையான பொருட்கள்:-

*தண்ணீர் – 1 டம்ளர்

*இஞ்சி – சிறு துண்டு

*பட்டை – 1

*புதினா – 2 இலைகள்

*டீ தூள் – 1 தேக்கரண்டி

*சர்க்கரை – தேவையான அளவு

செய்முறை:-

அடுப்பில் ஒரு டீ போடும் பாத்திரம் வைத்து அதில் 1 கிளாஸ் தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும். அடுத்து ஒரு உரலில் சிறு துண்டு இஞ்சி போட்டு இடித்து கொள்ளவும். இந்த இடித்த இஞ்சியை அதில் சேர்த்து கொள்ளவும்.

அடுத்து 1 பட்டை சேர்த்து சேர்த்து கலந்து கொள்ளவும். அடுத்து 5 புதினா இலைகளை போடவும்.

பிறகு 1 தேக்கரண்டி டீ தூள் சேர்த்து மிதமான தீயில் கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும்.
பின்னர் 1 கிளாசில் தேவையான அளவு சர்க்கரை சேர்த்து கொதிக்க வைத்துள்ள சாயாவை ஊற்றி கலந்து கலக்கி பருகவும்.

இந்த முறையில் சாயா செய்து பருகினால் அதிக சுவையுடனும் உடல் ஆரோக்கியத்துடனும் இருக்கும்.