Kerala Style Recipe: கேரளா ஸ்டைல் “சாயா” – சுவையாக செய்வது எப்படி?

0
47
#image_title

Kerala Style Recipe: கேரளா ஸ்டைல் “சாயா” – சுவையாக செய்வது எப்படி?

நம் அனைவருக்கும் பால் டீ மிகவும் பிடித்த பானம். இவை உடலுக்கு ஆரோக்கியத்தை அள்ளி கொடுப்பவகையாக உள்ளது. நம் ஊரில் பால் டீ என்று சொல்லப்படும் இந்த பானம் கேரளாவில் சாயா என்று அழைக்கப்படுகிறது. இந்த சாயாவை கேரளா ஸ்டைலில் செய்தால் குடிக்க மிகவும் சுவையாகவும், ஆரோக்கியம் நிறைந்த ஒன்றாகவும் இருக்கும்

கேரளா சாயா பருகுவதால் உடலுக்கு கிடைக்கும் பயன்கள்:-

*செரிமான கோளாறு நீங்கும்

*கொலஸ்ட்ரால் அளவை குறைக்க உதவும்

கேரளா ஸ்டைல் சாயா ரெசிபி (Kerala chaaya recipe in tamil):-

தேவையான பொருட்கள்:-

*பால் – 1/2 கப்

*தண்ணீர் – 1/2 கப்

*டீ தூள் – 1 தேக்கரண்டி

*சர்க்கரை – 1 1/2 தேக்கரண்டி

செய்முறை:-

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 1/2 கப் பால் ஊற்றிக் கொள்ளவும் அவை காய்ந்து வந்ததும் இறக்கி கொள்ளவும்.

அடுத்து அடுப்பில் ஒரு டீ போடும் பாத்திரம் வைத்து அதில் 1 கப் தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும். தண்ணீர் கொதிக்கும் தருணத்தில் 1 தேக்கரண்டி டீ தூள் சேர்த்து மிதமான தீயில் கொதிக்க விடவும். எந்த பிராண்ட் டீ தூளாக இருந்தாலும் சரி.

இந்த டீ தூள் கலவையை 2 நிமிடங்களுக்கு கொதிக்க விடவும். பின்னர் காய்ச்சிய பாலை அதில் சேர்த்து 2 நிமிடத்திற்கு கொதிக்க விடவும்.

பின்னர் அதில் சுவைக்கேற்ப சர்க்கரை சேர்த்து கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும். இந்த சாயாவை ஒரு கிளாஸுக்கு வடிகட்டி பருகவும். இந்த முறையில் செய்தால் கேரளா சாயா அதிக சுவை மற்றும் மணமுடன் இருக்கும்.