Kerala Style Recipe: கேரளா ஸ்டைலில் தித்திக்கும் “பால் பாயசம்” – இப்படி செய்தால் சுவையாக இருக்கும்!!

0
44
#image_title

Kerala Style Recipe: கேரளா ஸ்டைலில் தித்திக்கும் “பால் பாயசம்” – இப்படி செய்தால் சுவையாக இருக்கும்!!

நமக்கு மிகவும் பிடித்த அறுசுவை உணவுகளில் ஒன்று இனிப்பு. இதில் பல்வேறு உணவு வகைகள் இருக்கிறது. இந்த இனிப்பு வகைகளில் ஒன்று பாயசம். இதில் ஜவ்வரிசி பாயசம், பாசிப்பயறு பாயசம், அரிசி பாயசம், அவல் பாயசம் என்று பல வகைகள் இருக்கிறது.

அதில் ஒன்று தான் பால் பாயசம். இந்த வகை பாயசம் மிகவும் தித்திப்பாகவும், அதிக சுவையுடனும் இருக்கும். அதே சமயம் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

இந்த பால் பாயசத்தை கேரளா ஸ்டைலில் செய்து சாப்பிட்டால் அதிக ருசியுடன் இருக்கும்.

தேவையான பொருட்கள்:-

*பாசுமதி அரிசி – 1 கப்

*குங்குமப்பூ – 1 சிட்டிகை

*பால் – 4 கப்

*பாதாம் பருப்பு – 4

*முந்திரி(உடைத்தது) – 10

*சாரப் பருப்பு – 1 தேக்கரண்டி

*நெய் – 4 தேக்கரண்டி

தேவையான பொருட்கள்:-

முதலில் 1 தேக்கரண்டி பாசுமதி அரிசியை ஒரு பவுலில் போட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி கழுவி சுத்தம் செய்யவும். அடித்து அடுப்பில் ஒரு வாணலி வைத்து அதில் 1 தேக்கரண்டி நெய் ஊற்றி அவை சூடேறியதும் பாசுமதி அரிசியை சேர்த்து மிதமான தீயில் வறுக்கவும். பின்னர் 2 கப் அளவு தண்ணீர் ஊற்றி வேக விடவும்.

மற்றொரு அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 4 கப் அளவு பால் ஊற்றி காய்ச்சிக் கொள்ளவும். பின்னர் அடுப்பை அணைத்து நன்கு ஆறவிட்டு வெந்து கொண்டிருக்கும் பாசுமதி அரசியில் சேர்த்து கலந்து விடவும்.

ஊற்றிய பாலில் அரிசி குழைய வேக வேண்டும். பின்னர் 1 கப் சர்க்கரையை சேர்த்து நன்கு கலக்கி விடவும்.

அடுத்து 1 சிட்டிகை அளவு குங்குமப்பூ மற்றும் 1/4 தேக்கரண்டி அளவு ஏலக்காய்த் தூள் சேர்த்து கலந்து விடவும்.

பின்னர் 4 பாதம் பருப்பு மற்றும் 10 உடைத்த முந்திரியை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ள வேண்டும்.

அடுத்து மற்றொரு அடுப்பில் கடாய் வைத்து சிறிதளவு நெய் ஊற்றவும். அவை சூடேறியதும் நறுக்கி வைத்துள்ள பாதம், முந்திரி பருப்பு மற்றும் 1 தேக்கரண்டி சாரப்பருப்பு சேர்த்து வறுத்து கொதிக்கும் பாயசத்தில் சேர்த்து கலந்து விடவும். பின்னர் அடுப்பை அணைக்கவும். இவ்வாறு செய்தால் பால் பாயசம் அதிக சுவையில் இருக்கும்.