தினமும் காலையில் வெந்தய தேநீர் பருகுவதால் உடலுக்கு கிடைக்கும் 8 நன்மைகள்!!

0
48
#image_title

தினமும் காலையில் வெந்தய தேநீர் பருகுவதால் உடலுக்கு கிடைக்கும் 8 நன்மைகள்!!

நம்முடைய தினசரி உணவில் வெந்தயம் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த வெந்தயம் குளிர்ச்சி நிறைந்த பொருள். இவை உடல் சூடு, வயிறு எரிச்சல், வயிற்று வலி உள்ளிட்டவைகளை குணப்படுத்தும் தன்மையை கொண்டிருக்கிறது.

வெந்தயத்தில் உள்ள ஊட்டச்சத்துகள்:-

*பொட்டாசியம்

*நார்ச்சத்து

*வைட்டமின் சி

*புரதம்

*மாங்கனீசு

*மெக்னீசியம்

*இரும்புச்சத்து

வெந்தயத் தேநீர் செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்:-

*வெந்தயம் – 2 தேக்கரண்டி

*தேன் – தேவையான அளவு

செய்முறை:-

அடுப்பில் ஒரு டீ போடும் பாத்திரம் வைத்து அதில் 1 1/4 கிளாஸ் தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும். பின்னர் அதில் 2 தேக்கரண்டி வெந்தயம் சேர்த்துக் கொள்ளவும். 5 முதல் 7 நிமிடங்கள் வரை நன்கு கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும்.

பின்னர் இதை ஒரு டம்ளருக்கு வடிகட்டி கொள்ளவும். பிறகு தேவையான அளவு தேன் ஊற்றி கலந்து பருகவும்.

வெந்தயத் தேநீர் பருகுவதால் உடலுக்கு கிடைக்கும் அற்புத நன்மைகள்:-

*நெஞ்சு எரிச்சல், அல்சர் உள்ளிட்ட பாதிப்புகளால் அவதிப்படும் நபர்கள் தினமும் வெந்தயத் தேநீர் பருகுவது மிகவும் அவசியம். இப்படி தொடர்ந்து பருகி வருவதன் மூலம் உடலும் நல்ல ஆரோக்கியமாக இருக்கும்.

*செரிமான பிரச்சனை இருப்பவர்கள் 1 கிளாஸ் வெந்தயத் தேநீர் பருக வேண்டும். இதை தொடர்ந்து செய்து வருவதன் மூலம் செரிமான பிரச்சனை, வாயு தொல்லை உள்ளிட்டவை சரியாகும். அதேபோல் வயிறு சம்மந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளுக்கும் இது உரியத் தீர்வாக இருக்கும்.

*உடல் சூடு அதிகம் இருப்பவர்கள் வெந்தயத் தேநீர் பருகுவது நல்லது. வெந்தயம் குளிர்ச்சி நிறைந்த பொருள் என்பதினால் உடல் சூட்டை குறைக்க சிறந்த தீர்வாக இருக்கிறது.

*வெந்தயத்தில் அதிகளவு நார்ச்சத்துக்கள் இருக்கிறது. இவை உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைத்து உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.

*அதேபோல் மூட்டு வலி, மூட்டு வீக்கம் உள்ளிட்ட பாதிப்புக்கும் வெந்தயத் தேநீர் சிறந்த தீர்வாக இருக்கும்.

*மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு ஏற்படும் வயிற்று வலியை சரி செய்வதில் வெந்தயத்திற்கு முக்கிய பங்கு இருக்கிறது. 1/2 தேக்கரண்டி வெந்தயத்தை வாயில் போட்டு மென்று சாப்பிடுவதன் மூலம் இந்த பாதிப்பை சரி செய்ய முடியும்.

*கர்ப்பமாக இருக்கும் பெண்கள் முளைக்கட்டிய வெந்தயத்தை சாப்பிடுவதன் மூலம் குழந்தை பிறப்பின் போது சிக்கல் மற்றும் வலி இல்லாமல் இருக்கும்.

*தினமும் காலையில் வெந்தயத் தேநீர் பருகினால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும்.

*இரத்த சோகையால் அவதிப்பட்டு வரும் நபர்கள் தினமும் வெந்தயத் தேநீர் பருகுவதன் மூலம் நல்ல பலன் கிடைக்கும்.