கேரளா ஸ்டைல் ரெசிபி: கப்பக்கிழங்கு ஸ்வீட் சிப்ஸ் – செய்வது எப்படி?

0
100
#image_title

கேரளா ஸ்டைல் ரெசிபி: கப்பக்கிழங்கு ஸ்வீட் சிப்ஸ் – செய்வது எப்படி?

நொறுக்கு தீனி அனைவருக்கும் விருப்பமான ஒன்றாகும். அதுவும் சிப்ஸ் என்றால் சொல்லவே தேவை இல்லை. இந்த சிப்ஸில் காரம் காரம், இனிப்பு, புளிப்பு என பல வகைகள் இருக்கிறது. அந்த வகையில் கேரளாவில் அதிகம் விளையக் கூடிய கப்பக்கிழங்கை வைத்து இனிப்பு சிப்ஸ் செய்யும் முறை கீழே கொடுக்கப்பட்டு இருக்கிறது.

தேவையான பொருட்கள்:

*கப்பக்கிழங்கு – 1

*நாட்டு சர்க்கரை – 150 கிராம்

*சுக்குத் தூள் – 2 தேக்கரண்டி

செய்முறை:-

ஒரு கப்பக்கிழங்கை (மரவள்ளிக் கிழங்கு) எடுத்து தோல் நீக்கி கொள்ளவும். பின்னர் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி காயவைத்து உலர்திக் கொள்ளவும்.

அடுத்து அடுப்பில் ஒரு அடி கணமான பாத்திரம் வைத்து 150 கிராம் அளவு நாட்டு சர்க்கரை சேர்த்துக் கொள்ளவும். இவை பாகாக மாற சிறிதளவு தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும். நாட்டு சர்க்கரை கரைந்து பாகு பதத்திற்கு வந்ததும் நறுக்கி உலர்ந்து வைத்துள்ள கப்பக்கிழங்கு துண்டுகளை சேர்த்து மிதமான தீயில் கிளறி விடவும்.

பின்னர் சுக்கு பொடி சிறிதளவு சேர்த்து கிளறவும். தேவைப்பட்டால் வாசனைக்காக சிட்டிகை அளவு ஏலக்காய் தூள் சேர்த்து கலந்து விடலாம்.

பின்னர் கப்பக்கிழங்கு துண்டுகள் ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் இருக்க சிறிதளவு அரிசி மாவு சேர்த்து கொள்ளலாம். பிறகு அடுப்பை அணைத்து தயார் செய்து வைத்துள்ள இனிப்பு கப்பக் கிழங்கு சிப்ஸை ஒரு தட்டிற்கு மாற்றிக் கொள்ளவும். இவ்வாறு செய்தால் கேரளா கப்பக்கிழங்கு ஸ்வீட் சிப்ஸ் அதிக சுவை மற்றும் தித்திப்புடன் இருக்கும்.

Previous articleவீட்டில் லட்சமி கடாக்சம் தங்க – பௌர்ணமி அன்னைக்கு இப்படி செய்யுங்கள்!!
Next articleசளி இருமல் தொல்லை? இந்த கஷாயம் செய்து சாப்பிடுங்கள்.. 1 மணி நேரத்தில் சரியாகும்!!