கேரளா ஸ்டைல் “ரெட் தேங்காய் சட்னி” – செய்வது எப்படி?

0
108
#image_title

கேரளா ஸ்டைல் “ரெட் தேங்காய் சட்னி” – செய்வது எப்படி?

நம் தென்னிந்தியர்களின் பாரம்பரிய உணவு வகைகளில் இட்லி, தோசை முக்கிய இடத்தை பிடித்திருக்கிறது. இந்த உணவு வகைக்கு தேங்காய் சட்னி சிறந்த காமினேஷனாக இருக்கும். அதுவும் கேரளா ஸ்டைலில் செய்யப்படும் ரெட் தேங்காய் சட்னி அதிக சுவை மற்றும் மணத்துடன் இருக்கும்.

தேவையான பொருள்கள் :-

*தேங்காய் துருவல் – 1/2 கப்

*நறுக்கிய சாம்பார் வெங்காயம் – 4

*இஞ்சி – 1/2 இன்ச்

*வர மிளகாய் – 3

*உப்பு – தேவையான அளவு

*கடுகு – 1/2 தேக்கரண்டி

*உளுத்தம் பருப்பு – 1/2 தேக்கரண்டி

*கறிவேப்பிலை – 10 இலைகள்

*தேங்காய் எண்ணெய் – 1 தேக்கரண்டி

செய்முறை:-

ஒரு மிக்ஸி ஜாரில் துருவிய தேங்காய், நறுக்கிய வெங்காயம், வர மிளகாய், இஞ்சி மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கொள்ளவும். அடுத்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து சட்னி பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும்.

அடுத்து அடுப்பில் ஒரு வாணலி தேங்காய் எண்ணெய் ஊற்றி அவை சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்துத் தாளிக்கவும். பிறகு கறிவேப்பிலை மற்றும் நறுக்கிய வெங்காயம் சேர்க்கவும். வெங்காயக் கலவை நன்கு வெந்து வந்ததும் அடுப்பை அணைக்கவும்.

பின்னர் இந்த தாளிப்பை அரைத்து வைத்துள்ள ரெட் தேங்காய் சட்னியில் சேர்த்து கலந்து விடவும். இந்த கேரள ஸ்டைல் சிவப்பு தேங்காய் சட்னி இட்லி, தோசை, மெது வடை, ஊத்தப்பம் உள்ளிட்டவைகளுக்கு சிறந்த காமினேஷனாக இருக்கும்.

Previous articleஉடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த தினமும் காலையில் இந்த 5 வகை தேநீரை பருகுங்கள்!!
Next articleதீராத மலச்சிக்கல் பாதிப்பு சரியாக இதை ஒரு கிளாஸ் பருங்குங்கள்!! அடுத்த 1/2 மணி நேரத்தில் முழு தீர்வு கிடைக்கும்!!