கேரளா ஸ்டைல் சின்ன வெங்காய புளிக்குழம்பு!

0
226
#image_title

கேரளா ஸ்டைல் சின்ன வெங்காய புளிக்குழம்பு!

சின்ன வெங்காயம் மற்றும் புளியை வைத்து செய்யப்படும் குழம்பு கேரளாவில் மிகவும் பிரபலம். இந்த சின்ன வெங்காய புளிக்குழம்பு கேரளா ஸ்டைலில் செய்யும் முறை கீழேகொடுக்கப்பட்டு இருக்கிறது.

தேவையான பொருட்கள்:

*சின்ன வெங்காயம் – 1/2 கப்

*புளிக் கரைசல் – 1/4 கப்

*மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி

*மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி

*சீரகப் பொடி – 1/2 தேக்கரண்டி

*உப்பு – தேவையான அளவு

வறுத்து அரைப்பதற்கு…

*துருவிய தேங்காய் – 1/2 கப்

*கொத்தமல்லி – 1/2 தேக்கரண்டி

*மிளகு – 1 தேக்கரண்டி

*வரமிளகாய் – 3

*வெந்தயம் – 1/4 தேக்கரண்டி

தாளிப்பதற்கு…

*தேங்காய் எண்ணெய் – 1 1/2 தேக்கரண்டி

*கடுகு – 1 தேக்கரண்டி

*கறிவேப்பிலை – 1 கொத்து

*வரமிளகாய் – 2

செய்முறை…

முதலில் அடுப்பில் ஒரு வாணலி வைத்து வறுத்து அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக போட்டு, குறைவான தீயில் வறுத்து கொள்ளவும்.

பின்னர் இதை ஆறவிட்டு மிக்ஸி ஜாரில் போட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும்.

அடுத்து அடுப்பில் ஒரு வாணலி வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி அவை சூடானதும் தாளிப்பதற்கு கொடுப்பட்டுள்ள பொருட்களை சேர்த்து தாளித்து கொள்ளவும்.

பின்னர் அதில் தோல் நீக்கி சுத்தம் செய்து வைத்துள்ள சின்ன வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கிக் கொள்ளவும். அடுத்து அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் சீரகப் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும். பிறகு அரைத்து வைத்துள்ள தேங்காய் பேஸ்ட் சேர்த்து 2 நிமிடம் வதக்கி தேவையான அளவு தண்ணீர் மற்றும் புளிக் கரைசல் சேர்த்து நன்கு கொதிக்க விட்டு இறக்கி கொள்ளவும்.

Previous articleதிமுகவில் திடீர் ட்விஸ்ட்.. அட விவகாரம் இப்படி போகுதா..!!
Next articleகழுத்தை நெறிக்கும் கடன் காணாமல் போக இந்த சக்தி வாய்ந்த பரிகாரத்தை செய்யுங்கள்!