பைனலுக்கு முன்னேற போவது யார்.? பரபரப்பான ஆட்டத்தில் டெல்லிvs கொல்கத்தா.. கொல்கத்தா பௌலிங் தேர்வு.!!

Photo of author

By Vijay

இன்று நடைபெறும் குவாலிபயர் 2 ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதுகின்றன. இதில், டாஸ் வென்ற கொல்கத்தா கேப்டன் பௌலிங் தெரிவு செய்துள்ளார்.

நடப்பாண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில், இன்று ஷார்ஜா மைதானத்தில் குவாலிபயர் 2 போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையான டெல்லி அணியும், மோர்கன் தலைமையிலான கொல்கத்தா அணியும் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா கேப்டன் பவுலிங் தெரிவு செய்துள்ளார்.

இன்று நடைபெறும் போட்டியில் வெற்றி பெறும் அணி நாளை மறுநாள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் இறுதிப் போட்டியில் மோதும்.என்பது குறிப்பிடத்தக்கது.

டெல்லி அணி வீரர்கள் ;பிரித்வி ஷா, ஷிகர் தவான், ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பந்த் (w/c), மார்கஸ் ஸ்டோனிஸ், சிம்ரான் ஹெட்மியர், அக்ஸர் பட்டேல், ரவிச்சந்திரன் அஸ்வின், ககிசோ ரபாடா, அவேஷ் கான், அன்ரிச் நார்ட்ஜே

கொல்கத்தா அணி வீரர்கள் ;ஷுப்மான் கில், வெங்கடேஷ் ஐயர், ராகுல் திரிபாதி, நிதிஷ் ராணா, இயோன் மோர்கன் (கே ), தினேஷ் கார்த்திக் (w), சுனில் நரைன், ஷகிப் அல் ஹசன், லோக்கி பெர்குசன், சிவம் மாவி, வருண் சக்கரவர்த்தி