100 ரூபாயை நெருங்கிய தக்காளியின் விலை.!! பொதுமக்கள் ஷாக்.!!

0
98

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே அத்தியாவசியப் பொருட்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

அதிலும், குறிப்பாக தக்காளியின் விலை மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. கடந்த மாதம் வரை வெறும் 10 ரூபாய் முதல் 15 ரூபாய் வரை விற்கப்பட்ட தக்காளியின் விலை தற்போது கிலோ 80 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. பண்டிகை காலங்கள் வருவதால் தக்காளியின் விலை ஏற்றம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது வெளி மாநிலங்களில் இருந்து லாரிகள் மூலமாக தக்காளியை தமிழகத்திற்கு கொண்டு வரப்படுகிறது. ஆனால், கடந்த சில நாட்களாக தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருவதால் தக்காளி வரத்து குறைந்துள்ளது. அதனால், ஒரு கிலோ நாட்டு தக்காளியின் விலை சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் 80 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறத. மற்ற இடங்களிலும் தக்காளியின் விலை உயர்ந்துள்ளது.

இந்த தக்காளியின் விலை உயர்வு நூறு ரூபாயை நெருங்கி விடுமோ என்று பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். எங்கு குறைவாக தக்காளி விற்கப்படுகிறதோ அங்கு அரசே கொள்முதல் செய்து அனைத்து இடங்களுக்கும் பிரித்து அனுப்ப திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.