தெரிந்து கொள்ளுங்கள்.. பயனுள்ள 15 பாட்டி வைத்தியக் குறிப்பு இதோ..!!

0
78
#image_title

தெரிந்து கொள்ளுங்கள்.. பயனுள்ள 15 பாட்டி வைத்தியக் குறிப்பு இதோ..!!

1)ஆஸ்துமா நோய் உள்ளவர்கள் தினமும் தூதுவளை செடியின் பூவை பறித்துப் பாலில் போட்டுக் காய்ச்சிக் குடித்தால் நோயின் தொந்தரவு குறையும்.

2)காலை, மாலை என இரு வேளையிலும் 1 கிளாஸ் தேங்காய் பாலில் சிறிது தேன் கலந்து பருகி வந்தால் வாய்ப்புண் மற்றும் வயிற்றுப்புண் குணமாகும்.

3)வெங்காயத்தை சிறு துண்டுகளாக நறுக்கி கற்கண்டு சேர்த்து வதக்கி காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர நரம்பு தளர்ச்சி நீங்கும்.

4)கொய்யா இலையை உலர்த்தி பொடி செய்து டீ போட்டு குடித்து வருவதன் மூலம் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும்.

5)வெந்தயத்தை வறுத்து வெல்லம் கலந்து சாப்பிட்டு வர இருமல், பித்தக் கோளாறு நீங்கும்.

6)தேனில் இஞ்சியை ஊற வைத்து சாப்பிட்டு வர நெஞ்சு எரிச்சல் குணமாகும்.

7)எலுமிச்சை சாறை சுடுநீரில் கலந்து பருகி வந்தால் இருதயம் ஆரோக்கியமாக இருக்கும். இரத்தம் சுத்தமாகும்.

8)பித்தம் மற்றும் இரத்த கொதிப்பு பாதிப்பு இருக்கும் நபர்கள் அடிக்கடி முருங்கை கீரை சூப் செய்து பருகி வரலாம்.

9)விரலி மஞ்சளை மைய்ய அரைத்து அதில் சிறிதளவு சுண்ணாம்பு சேர்த்து நெற்றியில் பத்து போட்டால் தலையில் நீர் கோர்த்தல் பாதிப்பு குணமாகும்.

10)ஓமம், சீரகம், இஞ்சி, புதினா ஆகியவற்றை சிறிதளவு பாத்திரத்தில் சேர்த்து தண்ணீர் ஊற்றி கொதிக்க விட்டு வடிகட்டி தேன் கலந்து பருகி வருவதன் மூலம் உடல் எடையை குறைக்க முடியும்.

11)பூரான் கடிக்கு ஒரு வெற்றிலை, ஐந்து மிளகு மற்றும் சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து மைய்ய அரைத்து பூரான் கடித்த இடத்தில் தடவினால் விஷம் முறியும்.

12)எருக்க இலையை சிறிதளவு தண்ணீரில் போட்டு கொதிக்க விட்டு அந்த தண்ணீரை மூட்டுகளின் மேல் ஒத்தடம் கொடுத்து வந்தால் வலி, வீக்கம் குறையும்.

13)முறையற்ற மாதவிடாய் சரியாக 1 கிளாஸ் நீரில் 3 தேக்கரண்டி நாட்டுச் சர்க்கரை மற்றும் 1 துண்டு இஞ்சி சேர்த்து கொதிக்க விட்டு வடிகட்டி அருந்தலாம்.

14)மூல நோய் குணமாக துத்தி கீரையில் ஜூஸ் செய்து அருந்தி வரலாம்.

15)பாத வெடிப்பு மறைய சூடான தேங்காய் எண்ணெயில் சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து வெடிப்பு இருக்கும் இடத்தில் தடவி வரலாம்.