தேர்தலை முன்னிட்டு கோயம்பேடு சந்தை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

0
236
#image_title

தேர்தலை முன்னிட்டு கோயம்பேடு சந்தை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

தமிழகத்தில் வரும் 19ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. வாக்குப்பதிவு நாளில் அனைத்து அரசு நிறுவனங்களுக்கும் பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல தனியார் நிறுவனங்களும் விடுமுறை அளிக்க வேண்டுமென தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இதுமட்டுமின்றி 17ஆம் தேதியுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவடைவதால் அன்று முதல் வாக்குப்பதிவு நாளான 19 ஆம் தேதி வரை மூன்று நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடப்படுகின்றன. அதேபோல வாக்கு எண்ணிக்கை நாளான ஜூன் 4 ஆம் தேதியும் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் மூடப்பட உள்ளன.

இந்நிலையில் முதல் முறையாக தேர்தலை முன்னிட்டு சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கோயம்பேடு சந்தையில் மட்டும் 3 ஆயிரத்திற்கும் அதிகமான கடைகள் இயங்கி வருகின்றன. இதில் பத்தாயிரத்திற்கும் அதிகமான நபர்கள் சுமை தூக்குதல், தள்ளு வண்டி இழுத்தல் போன்ற பிற பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

எனவே அவர்கள் அனைவரும் வாக்களிப்பதற்கு வசதியாக ஏப்ரல் 19ஆம் தேதி கோயம்பேடு சந்தைக்கு விடுமுறை அளிக்க முடிவு செய்துள்ளார்கள். இதுதொடர்பான அறிக்கையை கோயம்பேடு வணிக வளாக அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் ஜிடி ராஜசேகர் வெளியிட்டுள்ளார்.

அதன்படி, தேர்தல் நாள் அன்று காய்கறி மற்றும் உணவு தானிய வளாகத்திற்கு முழு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாம். ஆனால் மலர் சந்தை மட்டும் வழக்கம்போல் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleதேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்துகளுக்கு ஏற்பாடு!
Next articleஇயக்குனர் பேரரசு விடுத்த கோரிக்கை – கண்டனம் தெரிவிக்கும் விஜய் ரசிகர்கள்!