தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்துகளுக்கு ஏற்பாடு!

0
137
#image_title

தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்துகளுக்கு ஏற்பாடு!

இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக ஜூன் 1ஆம் தேதி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அந்த வகையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 19 ஆம் தேதி மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால், அன்றைய தினம் பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி தனியார் நிறுவனங்களும் விடுமுறை அளிக்க வேண்டுமென தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்த சூழலில் வெளியூரில் வசிக்கும் நபர்கள் தேர்தலில் வாக்களிக்க அவர்களின் சொந்த ஊருக்கு செல்ல இப்போது முதலே ஆயத்தமாகி வருகிறார்கள். மேலும் மாணவர்களுக்கும் கோடை விடுமுறை என்பதால் தமிழக அரசு சிறப்பு பேருந்துகளுக்கு ஏற்பாடு செய்துள்ளது.

அதன்படி தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 10,214 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அந்த வகையில் ஏப்ரல் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு சுமார் 7,154 பேருந்துகளும், பிற ஊர்களில் இருந்து 3,060 சிறப்பு பேருந்துகளும் இயகப்படும் என தமிழக போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

அதேபோல வாக்குப்பதிவு முடிந்த பின்னர் ஏப்ரல் 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் மொத்தமாக 6,009 பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. எனவே இந்த சிறப்பு பேருந்துகளால் வாக்குப்பதிவு மற்றும் கோடை விடுமுறைக்காக சொந்த ஊருக்கு செல்லும் மக்கள் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.