kummatti kai benefits: இன்றைய காலக்கட்டத்தில் ஒரு மனிதன் நோய் இல்லாமல் வாழ்ந்தான் என்றால் அவரை விட ஒரு செல்வந்தர் யாரும் இல்லை என்று தான் கூறவேண்டும். தற்போது பல வகையான நோய்கள் நம்மை பாதிக்கின்றன. அதற்கெல்லாம் காரணம் என்ற பார்த்தால் பல உள்ளது. மாறி வரும் காலநிலை, நமது உணவு பழக்க வழக்கங்கள் என சொல்லிக்கொண்டு போகலாம். எப்படிபட்ட நோயாக இருந்தாலும் அதற்கு மருந்து தேடி நமது தாத்தா, பாட்டி காலத்தில் மருத்துவமனை நாடியது இல்லை. அவர்கள் உணவு பழக்க வழக்கங்கள் மாறுபட்டதாக இருந்ததால் அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியும் அதிக அளவு இருந்தது.
மேலும் அவர்கள் உண்ட காய்கள், பழங்கள், மூலிகைகள் என அனைத்தும் ஒரு காரணம். தற்போது எத்தனையோ மரபணு மாற்றம் செய்யப்பட்ட காய்கறிகளை நாம் சாப்பிட்டு வருகிறோம். நமக்கு தெரிந்த, ஆனால் பயன்கள் தெரியாமல் பல காய்களை நாம் அப்படியே விட்டு விடுகிறோம். அதில் ஒன்று தான் இந்த குமட்டிக்காய். அதன் பயன்களை என்ன என்பதை இந்த பதிவில் (Bitter apple benefits in tamil) காணலாம்.
குமட்டிக்காய் – kummatti kai benefits
இந்த காய் ஒரு படர்கொடி தாவரமாகும். இதனை குமட்டி அல்லது குமுட்டி என்று அழைப்பார்கள். ஆசியாவில் அதிக அளவு இந்த காய்கள் காணப்படுகிறது. இந்த காய் கசப்பான தன்மை கொண்டது. சிறிய பந்து போன்ற (சிறிய தர்ப்பூசணி) (Colocynth benefits in Tamil) வெள்ளை வரிகளை கொண்ட காய்.
பயன்கள்
இந்த காய் ஒன்று போதும் என்ற அளவுக்கு இதனுடைய பயன்கள் அளப்பறியது. கசப்பான தன்மை கொண்ட காய் என்பதால் யாரும் இதனை அதிக அளவு விரும்ப மாட்டார்கள்.
இந்த காய் இயற்க்கையிலேயே பூச்சி விரட்டும் தன்மை கொண்டது. அதனால் வேளாண்மையில் தாவரங்களில் ஏற்படும் பூச்சிகளை விரட்டவதற்கு இது பயன்படுகிறது.
அது போல இது தலையில் புழு வெட்டு என்ற நோயினால் பாதிக்கப்பட்டு அதனால் ஒரு குறிப்பிட்ட இடம் மட்டும் வழுக்கையாக மாறி முடி வளராமல் இருக்கும். அந்த இடத்தில் இந்த காயை நறுக்கு தேய்க்க வேண்டும். குறைந்தது ஒரு 20 நிமிடங்கள் அப்படியே வைத்து விட்டு தலை குளிக்கலாம். இல்லையென்றால் நாள் தோறும் தேய்த்து வரலாம். ஆண்களுக்கு தலையில் மட்டும் இல்லாமல் தாடி வளரும் இடங்களில் புழு வெட்டு காரணமாக முடி வளராமல் இருக்கும் அந்த இடத்தில் தேய்த்தால் தீர்வு கிடைக்கும்.
பிறகு தலையில் ஏற்படும் பொடுகு தொல்லை, அதனால் புண், எரிச்சலை இது குணப்படுத்துகிறது.
சர்க்கரை நோய் உள்ளவர்கள். இந்த காய் வத்தல் செய்து தினந்தோறும் உணவில் எடுத்து வரலாம். கடைகளில் குமட்டிக்காய் வற்றல் கிடைக்கிறது. இந்த காய்யை கழுவி வெயிலில் காய வைத்து அதனை பொடி செய்து நாள் தோறும் வெதுவெதுப்பான நீரில் கலந்து ஒரு டம்பளர் குடித்து வர சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும்.
பூச்சி பிரச்சனையால் வரும் வயிற்று வலி, இரைப்பை பிரச்சனைக்கு இந்த காய் சமைத்து சாப்பிட்டு வர வயிற்றில் உள்ள பூச்சி நீங்கி விடும்.
உடல் எடை குறைப்பதில் முக்கிய பங்கு வக்கிறது குமட்டிக்காய். இந்த குமட்டி காய் பழுத்ததும் அதன் விதைகளை சேகரித்து அதனை பொடியாக்கி, பழச்சாறு அல்லது நீரில் கொதிக்க வைத்து வடிக்கட்டி குடித்து வந்தால் போதும். உடல் எடை குறைந்துவிடும்.
மேலும் பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சனை ஏற்படும். நீர்க்கட்டி, கருப்பை போன்ற பிரச்சனைகளுக்கு இந்த காய் பொடி அல்லது வற்றல் சமைத்து சாப்பிட்ட வந்தால் தீர்வு கிடைக்கும்.
இந்த காய் நிமோனியாவை குணப்படுத்தும். மூட்டுவலி, சிறுநீர் கழிக்கும் போது ஏற்படும் எரிச்சல், மஞ்சள் காமலை ஏற்படுவதை குறைக்கிறது.
மேலும் படிக்க: உணவு சாப்பிடும் போது கட்டாயம் இதை செய்யாதீர்கள்..!! ஆபத்தாகிவிடும்..!!