பெண்களே.. இப்படி செய்தால் நீர்க்கட்டி அனைத்தும் ஒரு மாதத்தில் கரைந்து விடும்..!!

Photo of author

By Divya

பெண்களே.. இப்படி செய்தால் நீர்க்கட்டி அனைத்தும் ஒரு மாதத்தில் கரைந்து விடும்..!!

கருப்பை அதாவது சினைப்பை நீர்க்கட்டி என்பது பெண்களின் உடலில் ஏற்படும் குறைபாடு ஆகும். இன்றைய காலத்தில் நிறைய பெண்களுக்கு எளிதில் சினைப்பை நீர்க்கட்டி உருவாகி விடுகிறது. சினைப்பையில் இருந்து சினைமுட்டைகள் வெளிவராத காரணத்தினால் முறையற்ற மாதவிடாய் சுழற்சி ஏற்பட்டு நீர்க்கட்டிகள் உருவாகின்றது.

இதனால் குழந்தையின்மை பிரச்சனை ஏற்படும் அபாயம் உள்ளது. இதற்கு உணவு முறை மற்றும் வாழ்க்கை முறை மாற்றம் முக்கிய காரணங்களாக சொல்லப்படுகிறது. இவ்வாறு பெண்களுக்கு பெரும் பாதிப்பாக இருக்கும் இந்த நீர்க்கட்டி பிரச்சனையை சரி செய்ய கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் செய்முறை விளக்கத்தை பாலோ செய்யவும்.

தேவையான பொருட்கள்:-

*அம்மன் பச்சரிசி இலை

*பனங்கற்கண்டு

செய்முறை:-

முதலில் ஒரு கைப்பிடி அளவு அம்மன் பச்சரிசி இலை எடுத்து நிழலில் உலர்தி மிக்ஸி ஜார் அல்லது உரலில் போட்டு இடித்து பொடி செய்து கொள்ளவும். இந்த பொடியை ஒரு காற்றுப்புகாத டப்பாவில் போட்டு சேமித்து வைத்துக் கொள்ளவும்.

அடுத்து அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 1 கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடு படுத்தி அடுப்பை அணைக்கவும்.

இதை ஒரு கிளாஸூக்கு மாற்றி தயார் செய்து வைத்துள்ள அம்மன் பச்சரிசி இலை பொடி 1 1/2 தேக்கரண்டி அளவு சேர்த்து கலந்து விடவும். பிறகு அதில் சுவைக்காக சிறிதளவு வெள்ளை கற்கண்டு அல்லது பனங்கற்கண்டு சேர்த்து கலக்கி பருகவும். பெண்கள் இவ்வாறு தொடர்ந்து செய்து பருகி வருவதன் மூலம் கர்ப்பபையில் உள்ள நீர்க்கட்டி கரைந்து உடல் ஆரோக்கியமாக இருக்கும்.