பெண்களே தெரிந்து கொள்ளுங்கள்.. நீங்கள் கர்ப்பமாக இருப்பதை உணர்த்தும் 10 அறிகுறிகள்..!!
பெண்களுக்கு தாய்மை பாக்கியம் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். ஒவ்வொரு பெண்ணுக்கும் கர்ப்பம் தரிப்பதற்கான அறிகுறிகள் வேறுபடும். மாதவிடாய் தள்ளி போவது மட்டுமே கர்ப்பம் தரிப்பதற்கான அறிகுறி கிடையாது. வேறு சில அறிகுறிகளை வைத்தும் தாங்கள் கர்ப்பம் அடையப் போகிறீர்கள் என்பதை அறிந்து கொள்ள முடியும்.
கர்ப்பம் தரிப்பதற்கான அறிகுறிகள்:-
1)நீங்கள் கர்ப்பமாக இருந்தால் உங்களுக்கு அதிகளவு உடல் சோர்வு ஏற்படும். இந்த உடல் சோர்வு பிரச்சனை முதல் 3 மாதங்களுக்கு இருக்கும்.
2)அடிக்கடி குமட்டல் ஏற்படுவது நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்கள் என்பதற்கான அறிகுறி ஆகும். இந்த குமட்டல் பிரச்சனை ஒருசிலருக்கு முதல் 3 மாதங்களுக்கு இருக்கும். ஒருசிலருக்கு குழந்தை பிறக்கும் வரை இருக்கும்.
3)கர்ப்பமாக இருக்கும் பொழுது அதிகப்படியாக பசி எடுக்கும். ஆனால் சாப்பிட்ட பின்னர் அஜீரணக் கோளாறு, மந்த உணர்வு ஏற்படும். இதனால் மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படும்.
4)பொதுவாக கருவுற்ற பெண்களுக்கு வழக்கத்திற்கு மாறாக உடல் சூடு அதிகளவில் இருக்கும். அந்த நேரத்தில் மிகுந்த சோர்வாக இருப்பீர்கள். அதிக நேரம் தூங்குவீர்கள். சுறுசுறுப்புக்காக இருக்க மாட்டீர்கள்
5)நீங்கள் கருவுற்றிருந்தால் உணவு சமைக்கும் பொழுது வரும் வாசனையை விரும்ப மாட்டீர்கள். அந்த வாசனை உங்களுக்கு குமட்டலை ஏற்படுத்தும். அதற்கு மாறாக மண் வாசனை, சாம்பல் வாசனை இது போன்ற வாசனைகளை விரும்புவீர்கள்.
6)வீட்டு மாடிப்படி படி ஏறும் பொழுது, நடக்கும் பொழுது மூச்சு திணறல் ஏற்படும். கருவில் வளரும் குழந்தை தாயின் நுரையீரல் மீது அழுத்தம் கொடுக்க ஆரமிப்பதால் தான் இது போன்று மூச்சு திணறல் பிரச்சனை கருவுற்ற பெண்களுக்கு ஏற்படுகிறது.
7)கருவற்ற பெண்களுக்கு அடிக்கடி சிறுநீர் கழிக்க தோன்றும். இரவு நேரத்திலும் அடிக்கடி சிறுநீர் கழிப்பீர்கள்.
8)கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு அதிகப்படியான முதுகு வலி ஏற்படும். இந்த முதுகு வலி கர்ப்ப காலம் முழுவதும் இருக்கும்.
9)சில பெண்கள் கருவுற்றிருந்தால் மிக குறைவன இரத்த போக்கு ஏற்படும். இதனை மாதவிடாய் என்று கருதாமல் மருத்துவரை அணுகுவது நல்லது.
10)கருவுற்ற பெண்களுக்கு கை, கால் வீக்கம் ஏற்படும். சிறிது தூரம் நடந்தாலே கால் வலி அதிகளவில் இருக்கும்.