பெண்களே உங்களின் முகப் பொலிவை அதிகரிக்க வேண்டுமா!!? தேங்காய் பால் ஓட்ஸ் ஃபேஷ் மாஸ்க் பயன்படுத்துங்க!!!

0
184
#image_title

பெண்களே உங்களின் முகப் பொலிவை அதிகரிக்க வேண்டுமா!!? தேங்காய் பால் ஓட்ஸ் ஃபேஷ் மாஸ்க் பயன்படுத்துங்க!!!

பொலிவு இழந்து வாடிக் கிடக்கும் பெண்களின் முகங்களின் பொலிவை அதிகரிக்க தேங்காய் பாலை வைத்து எவ்வாறு ஃபேஷ் மாஸ்க் செய்வது என்பது பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

தேங்காய் பாலில் நமது சருமத்திற்கு தேவையான பல ஊட்டச்சத்துக்கள் உள்ளது. தேங்காய் பாலில் புரதச்சத்து, கால்சியம், மாவுச்சத்து, பாஸ்பரஸ், இரும்புச்சத்து, வைட்டமின் சி ஆகிய சத்துக்கள் உள்ளது.

இந்த தேங்காய் பால் ஃபேஷ் மாஸ்க் பயன்படுத்தும் பொழுது நமது சருமத்திற்கு குளிர்ச்சியை தருகின்றது. சருமத்தின் எரிச்சலை குறைக்கின்றது. இந்த தேங்காய் பாலை நமது சருமத்திற்கு பயன்படுத்தும் பொழுது நமது சருமத்திற்கு பொலிவை அளிக்கின்றது. இந்த தேங்காய் பால் ஃபேஷ் மாஸ்க் எவ்வாறு செய்வது என்பது பற்றி தெரிந்து கொள்ளலாம்.

தேங்காய் பால் ஃபேஷ் மாஸ்க் செய்ய தேவையான பொருட்கள்…

* தேங்காய் பால்
* ஓட்ஸ்

செய்முறை…

ஒரு கப் ஓட்ஸ் எடுத்து கரடுமுரடாக அரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் தேங்காயில் இருந்து அரைத்து எடுக்கப்பட்ட கெட்டியான தேங்காய் பால் ஒரு கிண்ணம் அளவு எடுத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் தேங்காய் பாலில் கரடு முரடாக அரைத்த ஓட்ஸை சேர்த்துக் கலந்து கொள்ள வேண்டும். இதோ முகத்திற்கு பொலிவை அதிகரிக்கும் மருந்து தயாராகி விட்டது.

இந்த கலவையை எடுத்து முகத்தில் மாஸ்க் போல மெதுவாக பூசிக் கொள்ள வேண்டும். 15 நிமிடங்கள் முகத்தில் வைத்திருந்து 15 நிமிடங்கள் கழிந்த பிறகு வெதுவெதுப்பான நீரினால் கழுவ வேண்டும். இதை தவிர்த்து செய்ய வேண்டும். முகம் பொலிவு பெறும். மேலும் முகத்தில் சருமத்தில் ஏற்படும் எரிச்சலை நீக்கி குளிர்ச்சியை தரும்.

Previous articleசருமத்திற்கு பல நன்மைகளை தரும் பப்பாளி!!! இதில் அல்வா செய்வது எப்படி!!?
Next articleகூந்தல் வளர்ச்சிக்கு உதவும் குடை மிளகாய் எண்ணெய்!!! இதை எவ்வாறு தயார் செய்வது!!?