மாணவர்களுக்கு லேப்டாப் மற்றும் டிஜிட்டல் பஸ் பாஸ்!! பள்ளிகளுக்கு பறந்த அதிரடி உத்தரவு!!
பள்ளிகளில் கோடை விடுமுறை முடிந்து தற்போது தான் திறக்கப்பட்டுள்ளது. திறந்த ஓரிரு நாட்களிலேயே பருவமழை காரணமாக ஒரு சில மாவட்டங்களில் மீண்டும் விடுப்பு விடும் சூழல் ஏற்பட்டு விட்டது.
பள்ளி திறப்பு தேதியானது தள்ளி வைக்கப்பட்டதால் அந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் சனிக்கிழமைகளில் தோறும் பள்ளிகள் இயங்கும் என பள்ளி கல்வித்துறை கூறியது. மேற்கொண்டு இந்த ஆண்டு பாடங்களை விரைந்து முடிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
இவ்வாறு இருக்கும் பட்சத்தில் அனைத்து பள்ளிகளிலும் தற்பொழுது சீருடை புத்தகங்கள் போன்றவை வழங்கி வருகின்றனர். அந்த வரிசையில் அடுத்ததாக இருப்பது பேருந்தில் பயணம் செய்து வரும் மாணவர்களுக்கான பஸ் பாஸ் தான்.
மாணவர்கள் கையில் பஸ் பாஸ் வழங்கப்படும் வரை அவர்கள் பள்ளி சீருடை அணிந்து பேருந்தில் ஏறினாலே இலவசம் என பள்ளி கல்வித்துறை கூறியிருந்தது. தற்பொழுது ஸ்மார்ட் பஸ் பாஸ் வழங்கப்படும் என அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த ஸ்மார்ட் பஸ் பாஸானது மாணவர்களின் அனைத்து தரவுகளையும் கணினி வாயிலாக இணைக்கப்பட்டிருக்கும்.
இதற்கான பணிகள் அனைத்தும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கூடிய விரைவில் மாணவர் மற்றும் மாணவிகளுக்கு இலவச பேருந்து பயணத்திற்கான பஸ் பாஸ் வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர்.
அதேபோல மாணவர்களின் தரவுகளை இணைக்க அவர்களின் விவரங்களை சேகரிக்குமாறு அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதேபோல இந்த வருடம் கணினி முதல் மிதிவண்டி வரை அனைத்தும் முறையாக வழங்க வேண்டும் என பள்ளி கல்வித்துறை ஆலோசனை செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.