EMI கட்டி முடித்தாலும் வண்டி உங்களுக்கு சொந்தமாகாது!! பலரும் அறியாத ஒன்று!!

0
62

EMI கட்டி முடித்தாலும் வண்டி உங்களுக்கு சொந்தமாகாது!! பலரும் அறியாத ஒன்று!!

பல பேர் வங்கியில் லோன் வாங்கி அதன் மூலம் சொந்தமாக வண்டி வாங்கிவிட்டு அதற்கு EMI கட்டி வந்தாலும் வண்டி நமக்கு சொந்தமாகாது என்பது சிலருக்கு தெரியாது ஒன்று. இதற்கு RC புத்தகத்தில் உள்ள Hypothecation(NOC) ஐ நீக்க வேண்டும். Hypothecation என்பது நாம் ஒரு வண்டியையோ அல்லது ஒரு காரையோ நம் சொந்த பணத்தில் வாங்கினாள் எந்த பிரச்சனையும் ஏற்படாது.

அதுவே நாம் வண்டி வாங்குவதற்கு லோன் மூலம் வாங்குகிறோம் என்றால் அந்த வண்டி உங்களது பெயரில் இருந்தாலுமே லோன் கொடுத்தவருக்கே சொந்தம் என்பதை தான் hypothecation என்று கூறுவார்கள். இதை நம் ஆர் சி புத்தகத்திலிருந்து நீக்காததன் காரணமாக இன்சூரன்ஸ் தொகை நிலுவையில் நிற்கும்.

இதனாலேயே இஎம்ஐ கட்டினாலும் வண்டி சொந்தமாகாது என்று கூறப்படுகிறது. இதை நீக்குவதற்கான வழிமுறைகளாவன,

நாம் NOC என்பதை பெற்றுக்கொண்டு ஆர்டிஓ அலுவலகத்திற்கு சென்று பார்ம் 35 என்பதை பூர்த்தி செய்து இந்த NOC யையும் சேர்த்து கொடுத்து விடவும். பிறகு ஒன்று அல்லது இரண்டு வாரங்கள் கழித்து rc புத்தகம் தயாரானவுடன் சென்று வாங்கிக் கொள்ளவும். இதை ஆன்லைன் மூலமாகவும் செய்யலாம்.

அதற்கு parivahan உள்ளே சென்று online services ஐ கிளிக் செய்து vehicle related service ஐ தேர்ந்தெடுத்து அதனுள் அனைத்து முகவரிகளையும் பதிவிடவும். இவ்வாறு பாதி வேலையை ஆன்லைனில் முடித்துவிட்டு மீதமுள்ள வேலையை நேரடியாக சென்று தான் செய்ய முடியும். இதை செய்து முடித்தால் நிலுவையில் உள்ள இன்சூரன்ஸ் தொகை சரியாகி வண்டி நமக்கு சொந்தமாகும்.

author avatar
CineDesk