கேரளா ஸ்டைலில் எலுமிச்சை சாதம்.. மணக்கும் சுவையில்..!

Photo of author

By Divya

கேரளா ஸ்டைலில் எலுமிச்சை சாதம்.. மணக்கும் சுவையில்..!

உடலுக்கு புத்துணர்ச்சி கொடுக்கும் எலுமிச்சை சாறில் கேரளா பாணியில் சாதம் செய்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.

தேவையான பொருட்கள்:-

1)பாசுமதி அரிசி சாதம் – 2 கப்
2)தேங்காய் எண்ணெய் – 4 தேக்கரண்டி
3)கடுகு – 1 தேக்கரண்டி
4)கடலை பருப்பு – 1 தேக்கரண்டி
5)வேர்க்கடலை – 1 தேக்கரண்டி
6)பெருங்காயத் தூள் – சிட்டிகை அளவு
7)மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
8)உப்பு – தேவையான அளவு
9)எலுமிச்சை சாறு – 5 தேக்கரண்டி
10)வர மிளகாய் – 4
11)பச்சை மிளகாய் – 2
12)கறிவேப்பிலை – 2 கொத்து

செய்முறை…

அடுப்பில் ஒரு வாணலி வைத்து தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். எண்ணெய் சூடானதும் அதில் கடுகு சேர்த்து பொரிய விடவும்.

அடுத்து கடலை பருப்பு மற்றும் வேர்க்கடலை சேர்த்து பொரிய விடவும். இதன் பிறகு வரமிளகாய் சேர்த்து கிளறவும்.

அடுத்து 2 பச்சை மிளகாய் நறுக்கி சேர்க்கவும். அதனை தொடர்ந்து பெருங்காயத் தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்க்கவும்.

இவை அனைத்தையும் மிதமான தீயில் வதக்கிய பின்னர் எலுமிச்சை சாறு மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து விடவும்.

பிறகு எடுத்து வைத்துள்ள பாசுமதி சாதத்தை அதில் போட்டு கிளறவும். பிறகு வாசனைக்காக சிறிது கறிவேப்பிலை சேர்த்து நன்கு கிளறி எடுக்கவும்.

இவ்வாறு செய்தால் எலுமிச்சை சாதம் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.