இன்று வெளியாகும் லியோ படத்தின் டிரெய்லர்!!! ரசிகர்களுக்கு ஷாக்கிங் சர்ப்ரைஸ் கொடுத்த படக்குழு!!!

0
140
#image_title

இன்று வெளியாகும் லியோ படத்தின் டிரெய்லர்!!! ரசிகர்களுக்கு ஷாக்கிங் சர்ப்ரைஸ் கொடுத்த படக்குழு!!!

நடிகர் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படத்தின் டிரெய்லர் இன்று(அக்டோபர்5) வெளியாகவுள்ள நிலையில் படக்குழு ரசிகர்களுக்கு தற்பொழுது ஒரு ஷாக்கிங் சர்ப்ரைஸ் கொடுத்துள்ளது.

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் லியோ திரைப்படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் சஞ்சய் தத், அர்ஜூன், கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், திரிஷா, சான்டி மாஸ்டர், பிரியா ஆனந்த், மேத்யூ தாமஸ், மன்சூர் அலிகான் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

லியோ திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பாக லலித் குமார் லியோ திரைப்படத்தை தயாரித்துள்ளார். லியோ திரைப்படம் அக்டோபர் மாதம் 19ம் தேதி வெளியாகவுள்ளது. லியோ திரைப்படத்தில் இருந்து நான் ரெடி, பேடாஸ் ஆகிய இரண்டு பாடல்கள் வெளியாகி உலகம் முழுவதும் வைரலாக பரவி வருகின்றது.

இந்நிலையில் கடந்த அக்டோபர் 2ம் தேதி லியோ திரைப்படத்தின் டிரெய்லர் குறித்த அறிவிப்பு படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதையடுத்து நடிகர் சஞ்சய் தத் அவர்களுக்கு உண்டான போஸ்டர், நடிகர் அர்ஜூன் அவர்களுடைய போஸ்டர் ஆகியவை வெளியாகி இருந்தது. இதற்கு மத்தியில் நடிகை திரிஷா அவர்களின் போஸ்டரை ரிலீஸ் செய்ய வேண்டும் என்று ரசிகர்கள் வேண்டுகோள் வைத்தனர்.

ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க லியோ படக்குழு நடிகை திரிஷா அவர்களின் போஸ்டரை தற்பொழுது வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டர் தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகின்றது. இந்த போஸ்டர் நடிகை திரிஷா அவர்கள் எதையோ பார்த்து பயப்படுகிறார். இரத்தம் தெறிக்கின்றது. இந்த போஸ்டரை பார்க்கும் பொழுது இன்று(அக்டோபர்5) லியோ டிரெய்லர் இணையத்தில் புதிய சாதனைகளை படிக்கப் போகின்றது என்பது தெரிகின்றது. மேலும் லியோ டிரெய்லர் 6 மணிக்கு வெளியாகும் என்ற தகவலும் கிடைத்துள்ளது.

Previous articleகம்பவுன்டராக இருந்து டாக்டராக மாறிய நபர்!!! எப்புரா என்ற ஆச்சரியத்தில் காவல் துறையினர்!!!
Next articleகிரிக்கெட் ரசிகர்களே தயாரா? இன்று முதல் தொடங்கவிருக்கிறது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்!