கிரிக்கெட் ரசிகர்களே தயாரா? இன்று முதல் தொடங்கவிருக்கிறது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்!

0
34
2023 world cup start
2023 world cup start

கிரிக்கெட் ரசிகர்களே தயாரா? இன்று முதல் தொடங்கவிருக்கிறது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்!

உலகக்  கோப்பை கிரிக்கெட் தொடரானது இன்று முதல் தொடங்கவிருக்கும் நிலையில் இந்த உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் கிட்டத்தட்ட 10 அணிகள் மோதவுள்ளன.அதன்படி முதல் போட்டியை, 2019 ஆம் ஆண்டு உலகக்கோப்பை இறுதிப் போட்டிகள் நுழைந்த நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் இன்று முதல் போட்டியை விளையாடுகின்றனர். கடந்த போட்டிகளில் நியூசிலாந்து அணியே உலக கோப்பையை வென்றது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

நீண்ட வருடங்களுக்கு பிறகு உலகக்  கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடப்பது என்பது ஒரு பெருமைக்குரிய ஒன்றாகும். மேலும் இந்த தொடரானது இந்தியாவில் நடைபெறுவதால் இந்திய அணி தான் உலக கோப்பையை, இந்த முறை வெல்லும் என்று பலரிடையே எதிர்பார்ப்புகள் அதிகரித்து காணப்படுகிறது.அனைத்து அணைகளும் ஒரு முறையாவது மற்ற அணிகளுடன் மோத வேண்டும். அவ்வாறே, அரைஇறுதி சுற்றுக்கு முன்னேறுவதற்கு கிட்டத்தட்ட 7 வெற்றிகள் அல்லது 6 வெற்றிகளாவது தேவை.

 

நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன்  வில்லியம்சன் காயம் காரணமாக இன்னும் முழுமையாக குணமடையவில்லை. என்ன தான் அவர் பயிற்சி ஆட்டங்களில் வந்து கலந்து கொண்டாலும்,உலகக்கோப்பை தொடரில் அவரால் கலந்து கொள்ள முடியவில்லை. காயம் காரணமாக இன்று அவருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது.மேலும் நியூசிலாந்து அணியை டாம் லாதம் அவர்கள் வழிநடத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கேன் வில்லியம்சனை தொடர்ந்து நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் டிம்சவுதியும் காயம் காரணமாக இன்னும் குணம் அடையவில்லை.

இதைப் பற்றி நியூசிலாந்தின் அணியின் தற்போதைய கேப்டனான டாம் லாதம் அவர்கள் கூறியதாவது: கேன்  வில்லியன்ஸனின் உடல் நிலையை நொடிக்கு நொடி கண்காணித்து வருவதாகவும், டிம் சவுதியும் விரைவில் குணமடைந்து இவர்கள் இருவருமே விரைவில் களத்திற்கு திரும்புவார்கள் என நம்பிக்கை அளித்துள்ளார்.மேலும்அவர் கூறுகையில் எங்களது வீரர்கள் ஐ.பி.எல் தொடரில் இந்தியாவிலும், இந்திய அணி வீரர்களுடனும் விளையாடி அனுபவம் பெற்றது, எங்கள் அணிக்கு மற்றொரு பலம் என்பதையும், எங்கள் அணியை குறைத்து மதிப்பீடும் ஆய்வாளர்களின் பேச்சுக்களை நாங்கள் கொஞ்சம் கூட கண்டு கொள்வதில்லை எனவும், எங்கள் அணிக்கான பிரதான பாணியில் நாங்கள் விளையாட வேண்டும், என்பதற்கு தான் நாங்கள் அதிக கவனத்தை செலுத்தி கொண்டு வருகின்றோம் என்றும் அவர் கூறினார்.

இங்கிலாந்து அணி:

2019 ஆம் ஆண்டு உலகக்கோப்பை சாம்பியன் என்ற கௌரவத்துடன் களமிறங்கும் அணிதான் இங்கிலாந்து அணி. இந்த அணியின் ஆல் ரவுண்டர் என திகழப்படும் பென் ஸ்டோக்ஸ்க்கு காயம் ஏற்பட்டதால் அவர் இன்றைய ஆட்டத்தில் விளையாடுவது சந்தேகம்தான் என பலரும் நம்புகின்றனர். பென் ஸ்டோக்ஸ் இந்த போட்டியை ஆடவில்லையென்றால் அவருக்கு பதில் ஹாரி புரூக் களத்தில் இறங்குவார்.

இதைப் பற்றி இங்கிலாந்து அணியின் கேப்டன் பட்லர் கூறுவதாவது:
பென் ஸ்டோகின் உடல்நலம் குறித்து அவர் வருத்தம் அளிப்பதாகவும், அவர் இல்லாத போட்டியினை எதிர்கொள்ள தயாராக இருப்பதாகவும், நாளை தொடங்கவிறுக்கும் உலக கோப்பையை நினைத்து மிகுந்த ஆர்வமுடன்,மகிழ்ச்சியுடன், இருப்பதாகவும் கிரிக்கெட் விளையாட இந்தியா ஒரு அருமையான இடம் என்றும் கூறியுள்ளார்.இரண்டு அணியின் சரவெடியான பேச்சியினை பார்க்கும் போது இன்று நடக்கவிருக்கும் போட்டியின் மீது அதீத எதிர்பார்ப்புகள் ஏற்பட்டுள்ளது

author avatar
Jeevitha