கம்பவுன்டராக இருந்து டாக்டராக மாறிய நபர்!!! எப்புரா என்ற ஆச்சரியத்தில் காவல் துறையினர்!!!

0
39
#image_title

கம்பவுன்டராக இருந்து டாக்டராக மாறிய நபர்!!! எப்புரா என்ற ஆச்சரியத்தில் காவல் துறையினர்!!!

திருப்பூர் மாவட்டம் அருகே கம்பவுன்டராக இருந்து கொண்டு டாக்டராக மாறிய நபரை காவல் துறையினர் கைது செய்தனர். மேலும் அந்த கம்பவுன்டர் எப்படி டாக்டராக மாறினார் என்ற ஆச்சரியத்தில் காவல் துறையினரும் பொதுமக்களும் உள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் குண்டடம் பகுதியில் அருகே உள்ள பொட்டிகாம்பாளையத்தில் ஒருவர் மருத்துவராக 10 ஆண்டுகளாக பொதுமக்களுக்கு மருத்துவம் பார்த்து தந்துள்ளார். ஆனால் இவருடைய நடவடிக்கைகளில் சந்தேகம் ஏற்பட யாரோ ஒருவர் மருத்துவத்துறைக்கு நேற்று(அக்டோபர்4) புகார் கொடுத்தனர்.

இதையடுத்து புகாரின் அடிப்படையில் திருப்பூர் மாவட்ட மருத்துவ பணிகள் துறையின் இணை இயக்குனர் அனுராக் அவர்களின் தலைமையிலான குழு அந்த பொட்டிகாம்பாளையம் பகுதிக்கு சென்றனர். மேலும் அங்கு மருத்துவராக பணியாற்றி வரும் தங்கராஜா என்பவரிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் கம்பவுன்டராக இருந்த தங்கராஜா அவர்கள் மருத்துவராக பணியாற்றி வந்தது தெரியவந்தது. இதையடுத்து போலி மருத்துவராக பணியாற்றி வந்த தங்கராஜா மீது இணை இயக்குனர் அனுராக் புகார் அளித்ததின் பேரில் குண்டும் போலிஸாசர் போலி மருத்துவரான தங்கராஜாவை கைது செய்தனர்.

இது குறித்து திருப்பூர் மாவட்ட மருத்துவ பணிகள் துறையின் இணை இயக்குனர் கனகராணி அவர்கள் “சேலத்தில் மருத்துவர் ஒருவரிடம் பயிற்சி பெற்ற தங்கராஜா அவர்கள் திருப்பூரில் பொட்டிகாம்பாளையத்தில் கடந்த பத்து ஆண்டுகளாக வீட்டில் கிளினிக் நடத்தி வந்துள்ளார். ஒரு அறை மட்டும் தான். ஆனால் அதில் 24 மணிநேரமும் இந்த கிளினிக் செயல்பட்டு வந்துள்ளது.

அறுவை சிகிச்சை செய்வதற்கு உண்டான அனைத்து வசதிகளும், அறுவை சிகிச்சை முடிந்த பின்னர் தையல் போடுவதற்கான வசதிகளும் அந்த கிளினிக்கில் இருந்தது. அட்டைப் பெட்டிகளில் குவியல் குவியலாக இருந்த மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டது. போலி மருத்துவரை போலவே தங்கராஜா அவர்கள் வைத்திருந்த சான்றிதழ்கள் அனைத்தும் பொய்யானவை” என்று கூறினார்.

போலி மருத்துவர்கள் அனைவரும் எளிமையாக சிக்கிக் கொள்ளும் பட்சத்தில் இந்த போலி மருத்துவர் தங்கராஜா அவர்கள் கடந்த 10 ஆண்டுகளாக மருத்துவராக இருந்து யாரிடமும் சிக்காமல் பணிபுரிந்து வந்தது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.