சட்டசபைத் தேர்தலில் தனித்து போட்டியிடுவோம்!! சமக தலைவர் சரத்குமார் அதிரடி அறிவிப்பு!!

சட்டசபைத் தேர்தலில் தனித்து போட்டியிடுவோம்!! சமக தலைவர் சரத்குமார் அதிரடி அறிவிப்பு!!

தமிழ் திரைபடங்களின் முன்னணி நடிகரான நடிகர் சரத்குமார் கடந்த 2007  ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 31  ஆம் தேதியில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி என்ற ஒரு அரசியல் கட்சியை ஆரம்பித்தார்.

இந்த கட்சியானது எப்போதுமே நாட்டின் மிகப்பெரிய தூண்களான அப்துல் கலாம் மற்றும் காமராஜர் போன்றவர்களின் சிந்தனைகளையும், கொள்கைகளையும், வழிக்காட்டுதல்களையும் முன்னிறுத்தி செயல்படும் என்று சரத்குமார் கட்சி துவக்கத்தின் போது தெரிவித்திருந்தார்.

இவர் முதலில் திமுக கட்சியுடன் கூட்டணியில் இருந்து, பிறகு அதிமுகவுடன் ஒன்று சேர்ந்தார். அதிலிருந்தும் பிரிந்து கடந்த 2007  ஆம் ஆண்டில் தான் இந்த அகில் இந்திய சமத்துவ மக்கள் கட்சியை துவக்கி தலைவரானார்.

அந்த வகையில், நேற்று சேலம் மாவட்டத்தின் இரும்பாலையில் உள்ள ஒரு மண்டபத்தில் சமத்துவ விருந்து நிகழ்ச்சியானது சேலம் மண்டல அளவில் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட சமத்துவ மக்கள் கட்சி தலைவரான சரத்குமார், பணம் கொடுத்து தேர்தல் நடத்தும் முறையை மாற்ற வேண்டும். இதற்கான புரட்சியை உருவாக்க வேண்டும் என்று கூறி உள்ளார்.

இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய சரத்குமார், அடுத்து வரக்கூடிய நாடாளுமன்ற தேர்தலை பற்றி இதுவரை எந்த ஒரு முடிவும் எடுக்கப்படவில்லை.

அதாவது, அடுத்த வரக்கூடிய நாடாளுமன்ற தேர்தலை விட 2026  ஆம் ஆண்டு வரக்கூடிய சட்ட சபை தேர்தலுக்கு தான் நாங்கள் முக்கியத்துவம் கொடுத்து வருவதாகவும், அதை நோக்கியே எங்களது பயணம் போகிறது என்றும் கூறி உள்ளார்.

எனவே, 2026  ஆம் ஆண்டு வரக்கூடிய சட்ட சபைத் தேர்தலில் தனித்து நின்று போட்டியிடப் போவதாக செய்தியாளர்களிடம் பேசிய சமக கட்சி தலைவர் சரத்குமார் கூறி உள்ளார்.