உடல் எடையை சரசரனு குறைக்க உதவும் மணத்தக்காளி கீரை!!
இன்றைய நவீன உலகில் ஆரோக்யம் என்பதை கேள்விக்குறியாக இருக்கிறது.நம் வாழ்க்கை முறை மற்றும் உணவுப்பழக்க வழக்கம் முற்றிலும் மாறுபட்டு விட்டதால் முறையற்ற தூக்கம், சோம்பேறித் தனம்,உடல் பருமன் உள்ளிட்ட பல பிரச்சனைகளை நாம் சந்தித்து வருகிறோம்.
இதற்கு இயற்கை வழிகளில் தீர்வு காண்பதன் மூலம் விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.நம் உடலுக்கு ஆரோக்கியத்தை அள்ளி கொடுக்கும் கீரைகளில் ஒன்றான மணத்தக்காளி கீரை உடல் எடையை குறைக்க பெரிதும் உதவுகிறது.இந்த கீரையில் வைட்டமின் இ,டி,நீர்ச்சத்து,தாது உப்பு,புரோட்டின் உள்ளிட்டவை நிறைந்து இருக்கிறது.
தேவையான பொருட்கள்:-
*மணத்தக்காளி கீரை – கைப்பிடி அளவு
*கருப்பட்டி – சிறிதளவு
*மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
*சீரகத்தூள் – சிறிதளவு
*இஞ்சி – சிறு துண்டு
*உப்பு – சிட்டிகை அளவு
*எண்ணெய் – 3 துளிகள்
செய்முறை:-
முதலில் மணத்தக்காளி கீரை 1 கைப்பிடி அளவு எடுத்து தண்ணீர் கொண்டு சுத்தம் செய்து கொள்ளவும்.பின்னர் இதை ஒரு உரலில் போட்டு கொள்ளவும்.
அடுத்து அதில் கருப்பட்டி சிறிதளவு,சீரகத்தூள் சிறிதளவு,இஞ்சி சிறு துண்டு,மஞ்சள் தூள் 1/4 தேக்கரண்டி,எண்ணெய் சில துளிகள் மற்றும் உப்பு சிட்டிகை அளவு சேர்த்து நன்கு அரைத்து விழுதாக்கி கொள்ளவும்.
பின்னர் இந்த விழுதை ஒரு பவுலில் போட்டு சிறு சிறு உருண்டைகளாக பிடித்து விழுங்க வேண்டும்.வாரத்தில் இரு முறை இந்த விழுதை உண்ணுவதன் மூலம் உடலில் உள்ள கெட்ட கொழுப்பு கரைந்து விடும்.இதனால் உடல் எடை குறைந்து உடல் ஆரோக்கியமாக இருக்கும்.