துலாம் ராசி – இன்றைய ராசிபலன்!! புத்துணர்ச்சி கொடுக்கும் நாள்
துலாம் ராசி அன்பர்களே ராசி அதிபதி சுக்கிர பகவான். இன்றைக்கு உங்களால் புத்துணர்ச்சி கொடுக்கும் நாளாக உள்ளது. நிதி நிலவன் மிக அருமையாக உள்ளது. கணவன் மனைவி இடையே எந்த ஒரு குழப்பமும் இல்லாமல் அருமையாக நடைபெறும். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை பூர்த்தி செய்து மகிழ்ச்சி அடைவீர்கள்.
உத்தியோகத்தில் பொறுப்புகள் கூடும். தொழில் வியாபாரம் முயற்சிகள் அருமையாக உள்ளது. கொடுக்கல் வாங்கல் பாதைகள் மிகு சுலபமானதாக அமையும். உத்தியோகத்தில் உள்ள பெண்களுக்கு தனி மரியாதை கிடைக்கும். குடும்ப நிர்வாகத்தில் இருக்கும் பெண்கள் சில நேரங்களில் சில உடல் உபாதைகளால் பணம் சஞ்சலித்துக் கொள்ளும்.
நண்பர்கள், உறவினர்கள் மற்றும் உடன்பிறந்த சகோதர சகோதரிகளிடம் சில பிரச்சனைகள் வரலாம் அவர்களை முடிந்தவரை அனுசரித்துக் கொள்ளுங்கள். அரசியல்வாதிகள் முன்னேற்றம் காண்பார்கள். கலைத்துறையை சேர்ந்த அன்பர்கள் கவனமுடன் செயல்படுவது நல்லது.
மூத்த வயதை சேர்ந்தவர்கள் தன் உடல் ஆரோக்கியத்தில் தனிக் கவனம் எடுத்துக் கொள்ளுதல் மிக அவசியம். இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறம் அகர் நீல நிற ஆடையை அணிந்து துர்க்கை அம்மனை வணங்கி வாருங்கள் இன்று உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.