‘தடைசெய்யப்பட்ட மிகவும் சத்தான அரிசி’
நாம் தினமும் பயன்படுத்தும் வெள்ளை அரிசி, பழுப்பு அரிசி ரகங்களைவிட அதிக சத்துகளைக் கொண்டது, கவுனி அரிசி. ஆசிய நாடுகளில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக கவுனி அரிசி பயன்படுத்தப்படுகிறது. மற்ற அரிசி வகைகளுடன் ஒப்பிடுகையில் மிகக் குறைந்த அளவே கவுனி அரிசி பயிரிடப்படுகிறது. இதன் சிறப்பை புரிந்துகொண்ட அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய நாடுகள் அண்மைக்காலமாக இந்த அரிசியை பரவலாகப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளன. சீனாவில் இந்த அரிசியை ‘தடைசெய்யப்பட்ட அரிசி’ என்கிறார்கள். அதற்கு ஒரு வரலாற்றுக் காரணம் உண்டு. … Read more