15.09.2020 தேய்பிறை பிரதோஷம் சிவராத்திரி சக்தி வாய்ந்த நாள் ! வெற்றி கிடைக்கும்!

0
64

15.09.2020 இந்த நாளில் தேய்பிறை பிரதோஷமும் சிவராத்திரியும் சேர்ந்து வருகின்றது. இந்த நாளில் சிவபெருமானை வணங்கினால் சக்தி கிடைக்கும், வெற்றிகள் கிடைக்கும், மனக் கஷ்டங்கள் நீங்கும், லக்ஷ்மி கடாக்ஷம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

இந்த நாளின் சிறப்பை பற்றியும் இந்த நாளில் எப்படி விரதம் இருக்க வேண்டும் என்பதை பற்றியும் பார்க்கலாம்.

செவ்வாய் கிழமைகளில் தேய்பிறைப்பிரதோஷமும், சிவராத்திரியும் சேர்ந்து வருவதால் இந்த நாளானது சிவபெருமானுக்கு உகந்த நாளாக கருதப்படுகிறது.

இந்நாளில் சிவபெருமானையும், நந்தி பெருமானையும் வணங்கி வந்தால் நமக்கு இருக்கக்கூடிய கஷ்டங்கள் யாவும் தீர்ந்து எடுத்த காரியங்கள் கூடிய சீக்கிரம் வெற்றி கிடைக்கும்.

அதிலும் தேய்பிறையில் பிரதோஷம் சேர்ந்து வருவது மிகவும் சக்தி வாய்ந்த நாளாக கருதப்படுகிறது.

இந்த நாளில் சிவபெருமானை வணங்கினால் லட்சுமி கடாட்சம் கிடைக்கும். கொரோனா காலத்தில் அனைவருக்கும் பிரச்சினை உள்ளது உடல் உபாதைகள், பணக் கஷ்டங்கள், வேலையின்மை என அனைத்து பிரச்சினைகள் அனைத்தையும் போக்கக் கூடிய சக்தி வாய்ந்த விரதம் இந்த தேய்பிறை விரதம்.

மேலும் இந்த தேய்பிறை பிரதோஷம் நாளானது மகாளய பட்சத்தில் வருவதால் முன்னோர்களின் ஆசி முற்றிலுமாக கிடைக்கும்.

1. விரத நாளுக்கு முன்னதாகவே பூஜை அறைகளை சுத்தம் செய்துவிட்டு அடுத்த நாள் பூஜை அறையில் விளக்கு ஏற்றி சிவபெருமானுக்கு வில்வ இலைகளால் பூஜை செய்ய வேண்டும்.

2. சர்க்கரை பொங்கலை நெய்வேத்தியமாக வைத்து வணங்குவது சிறப்பு ஆகும்.

3. காலையிலும் மாலையிலும் சிவ பெருமானின் கோயிலுக்குச் சென்று வணங்குவது மிகவும் சிறப்பு.

4. உபவாசம் இருப்பவர்கள் உபவாசம் இருக்கலாம். பிரதோஷம் முடியும் வரை உபவாசம் இருக்கலாம்.மாலை சிவபெருமானுக்கு நடக்கக்கூடிய பூஜைகளில் கலந்துகொண்டு அங்கு கொடுக்கும் பிரசாதத்தை சாப்பிட்டு உபவாசத்தை முடிக்கலாம்.

5. அப்படி கோயிலுக்கு செல்ல முடியவில்லை என்று கூறுபவர்கள் வீட்டிலேயே சிறிய அளவிலான நெய்வேத்தியத்தை படைத்து 6 மணிக்குள் பூஜையை முடித்துவிட்டு அதை சாப்பிட்டு உபவாசத்தை முடிக்கலாம்.

6. இப்படி நாள் முழுவதும் தேவாரம், திருவாசகம், ருத்ரபாராயணம் படித்து இறைவனை மனமுருகி வழிபட வேண்டும்.

7. சிலர் பால் பழங்கள் மட்டுமே உண்டு விரதம் இருப்பார்கள். அதுவும் சரியான முறைதான். உடல் உபாதைகள் இருப்பவர்கள் விரதம் இருக்காமல் பால் பழங்களை உண்டு விரதம் இருக்கலாம்.

8. இந்த நாளில் அன்னதானம் செய்வதும் சிறப்பு வாய்ந்ததாகும். ஏற்கனவே மகாளய பட்சத்தில் அனைவரும் அன்னதானம், வஸ்திர தானம் செய்தாலும் இந்த பிரதோஷ காலத்தில் அன்னதானம் செய்வது மிக மிக சிறப்பு.

இப்படி விரதம் இருந்து மனமுருகி சிவபெருமானின் நந்தி பெருமானையும் ‌ வேண்டினால் நமக்கு மிக விரைவாக பரிபூரணமாக அவரது நல்லாசி கிடைக்கும் என்பதில் ஐயம் இல்லை.

எனவே உங்களால் முடிந்தவரை தானம் தர்மங்களை செய்து விரதத்தை மேற்கொண்டு வாருங்கள்.

 

author avatar
Kowsalya