மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பு! உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு!
100 யூனிட் மின்சாரமானது தமிழகத்தில் உள்ள அனைத்து மின் இணைப்பிற்கு வழங்கப்பட்டு வருகின்றது.அவ்வாறு வழங்கப்படும் மானியத்தை தொடர்ந்து நாம் பெறவேண்டும் என்றால் மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பது என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.மேலும் இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என புகார் எழுந்து வருகின்றது.ஆனால் அந்த புகார்களை அரசு ஏற்று கொள்ளவில்லை.மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பிற்கு கால அவகாசம் வழங்கியது.
அரசு வெளியிட்ட அறிவிப்பில் ஆதார் எண் இணைக்கவில்லை என்றால் மின்சார மானியம் வழங்கப்படமாட்டாது என அறிவித்தது.ஆனால் இதற்கு விதிகள் எந்த சட்டத்திலும் குறிப்பிடவில்லை என அறிவித்தனர். மானியம் பெற ஆதார் எண் இணைப்பை கட்டாயமாக்க வேண்டும் என்றால் அதற்கு மாநில தொகுப்பு நிதியிலிருந்து வழங்க வேண்டும் என தெரிவிக்கப்படுள்ளது.
மின் நுகர்வோர் ஆதார் எண் இணைப்பு பணிகள் இடையில் எந்த காரணத்திற்காகவும் இடையில் நிறுத்த கூடாது.என அறிவிக்கப்பட்டது.இந்நிலையில் கடந்த டிசம்பர் 31 ஆம் தேதியுடன் இதற்கான காலவகாசம் முடிவடைகிறது என முன்னதாகவே அறிவிக்கபட்டிருந்த நிலையில் கடந்த டிசம்பர் 31 ஆம் தேதி மின்வாரிய துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.
அந்த அறிவிப்பில் மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பதற்கு ஜனவரி 31 ஆம் தேதி வரை காலவகாசம் வழங்கப்பட்டுள்ளது.அதனால் இதுவரை மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்காத மக்கள் உடனடியாக இணைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் இந்த அரசாணையை ரத்து செய்யக்கோரி தேசிய மக்கள் சக்தி கட்சித்தலைவர் வழக்கறிஞர் ரவி,சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் கடந்த டிசம்பர் 21 ஆம் தேதி இந்த மனுவை தள்ளுபடி செய்து தீர்ப்பு வழங்கப்பட்டது.இந்த தீர்ப்பை எதிர்த்து வழக்கறிஞர் ரவி உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார் இது தொடர்பாக தமிழக அரசின் சார்பிலும் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.