வீட்டில் பல்லி தொல்லை? அப்போ இதை செய்தால் ஒரு இரவில் முழு தீர்வு கிடைத்து விடும்!!

Photo of author

By Divya

வீட்டில் பல்லி தொல்லை? அப்போ இதை செய்தால் ஒரு இரவில் முழு தீர்வு கிடைத்து விடும்!!

நம்மில் பலர் வீட்டு சமையலறையில் பல்லி தொல்லை அதிகளவில் இருக்கும். இதை சரி செய்ய நாம் கடையில் உள்ள இரசாயனம் கலந்த பொருட்களை வாங்கி பயன்படுத்துவதை விட வீட்டில் உள்ள அந்துருண்டை மற்றும் வெங்காயம் உள்ளிட்ட பொருட்களை வைத்து பல்லி தொல்லைக்கு ஒரே நாளில் குட் பாய் சொல்லிவிடலாம்.

பல்லி தொல்லை நீங்க எளிய வழிகள்:-

*பல்லி, கரப்பான் கரப்பான் பூச்சி, பாச பூச்சி உள்ளிட்ட பூச்சிகளை விரட்டும் தன்மை அந்துருண்டைகளுக்கு இருக்கிறது. இந்த அந்துருண்டைகளை வீட்டில் பல்லி நடமாட்டம் இருக்கும் இடங்களில் வைப்பதினால் அதன் தொல்லை முழுமையாக நீங்கும்.

*பூண்டு பற்களை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி பல்லி நடமாட்டம் இருக்கும் இடங்களில் வைப்பதன் மூலம் பல்லி தொல்லை நீங்கும். அல்லது பூண்டு பற்களை மிக்ஸி ஜாரில் போட்டு மைய்ய அரைத்து தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ளவும். பின்னர் இதை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி பல்லி நடமாட்டம் இருக்கும் இடங்களில் ஸ்ப்ரே செய்வதன் மூலம் அதன் தொல்லை முழுமையாக நீங்கும்.

*பெரிய வெங்காயத்தை அரைத்து அதில் தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். பின்னர் அதை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி வீட்டில் பல்லி நடமாட்டம் இருக்கும் இடங்களில் ஸ்ப்ரே செய்யவும். எவ்வாறு செய்வதன் மூலம் பல்லி தொல்லை நீங்கும்.

*கோழி முட்டையின் ஓடுகளை தூள் செய்து அல்லது முழுமையாக பல்லி இருக்கும் இடங்களில் வைப்பதினால் பல்லி நடமாட்டம் முழுமையாக இருக்காது.

*மயிலிறகை பல்லி நடமாடும் பகுதியில் வைத்தால் பல்லிகள் அந்த பக்கமே வராது.

*ஒரு பவுலில் சிறிதளவு காபி தூள் மற்றும் புகையிலை தூளை சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி சிறு சிறு உருண்டைகளாக பிடித்து பல்லி நடமாட்டம் இருக்கும் இடங்களில் வைப்பதினால் அவற்றின் நடமாட்டம் முழுமையாக நீங்கும்.