பல்லி தொல்லை? அவற்றை விரட்ட எளிய வழிகள் இதோ!! நிச்சயம் தீர்வு கிடைக்கும்!!

0
39
#image_title

பல்லி தொல்லை? அவற்றை விரட்ட எளிய வழிகள் இதோ!! நிச்சயம் தீர்வு கிடைக்கும்!!

*முதலில் 2 முதல் 3 பூண்டு பற்களை மிக்ஸி ஜாரில் போட்டு மைய்ய அரைத்துக் கொள்ளவும். பின்னர் 1 கிளாஸ் தண்ணீர் ஊற்றி கலந்து கொள்ளவும். இதை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி பல்லி நடமாட்டம் இருக்கும் இடத்தில் தெளிப்பதன் மூலம் பல்லிகள் தெறித்தோடி விடும். காரணம் பல்லிகளுக்கு பூண்டு வாசனை ஆகாது.

*ஆறு பல் பூண்டு, பாதி பெரிய வெங்காயத்தை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்துக் கொள்ளவும். பின்னர் இதில் இருந்து சாறு எடுத்து ஒரு பவுலில் சேர்த்துக் கொள்ளவும். அடுத்து 2 தேக்கரண்டி எலுமிச்சை சாறு மற்றும் 2 தேக்கரண்டி டெட்டாலை அதில் ஊற்றி கலந்து விடவும். தொடரந்து 1 கிளாஸ் தண்ணீர் ஊற்றி கலக்கி ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றிக் கொள்ளவும். இந்த கலவையை பல்லி நடமாட்டம் இருக்கும் இடங்களில் ஸ்ப்ரே செய்வதன் மூலம் நல்ல தீர்வு கிடைக்கும்.

*ஒரு தட்டில் 2 தேக்கரண்டி காபித்தூள் கொட்டி கொள்ளவும். பின்னர் அதில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி சிறு சிறு உருண்டைகளாக உருட்டி கொள்ளவும். இதை பல்லி நடமாட்டம் இருக்கும் இடத்தில் வைத்து விடவும். இதை பல்லிகள் உண்டால் உடனடியாக இறந்து விடும்.

*முதலில் 6 சின்ன வெங்காயத்தின் தோலை நீக்கி ஒரு உரலில் போட்டு நன்கு இடித்துக் ஒரு பவுலுக்கு சாறு பிழிந்து கொள்ளவும். அடுத்து அதில் 1 1/2 டம்ளர் தண்ணீர், 1 தேக்கரண்டி டெட்டால் ஊற்றி நன்கு கலந்து கொள்ளவும். இதை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி பல்லி நடமாட்டம் இருக்கும் இடத்தில் தெளிக்கவும். இவ்வாறு செய்வதன் மூலம் வீட்டில் மறைந்து இருந்த பல்லிகள் அனைத்தும் உடனடியாக வீட்டை விட்டு வெளியேறி விடும்.

*1 தேக்கரண்டி காபித்தூளை ஒரு தட்டில் கொட்டி கொள்ளவும். பின்னர் அதில் தனி மிளகாய்த்துள் 1/4 தேக்கரண்டி மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து சிறு சிறு உருண்டைகளாக பிடித்து கொள்ளவும். இதை பேப்பரில் வைத்து பல்லி நடமாட்டம் இருக்கும் இடங்களில் வைத்தால் பல்லிகள் உண்ணத் தொடங்கும். பின்னர் செத்து மடிந்து விடும்.

*ஓரு பவுலில் 1/2 டம்ளர் தண்ணீர் ஊற்றி மற்றும் 2 தேக்கரண்டி டெட்டால் சேர்க்கவும்.
பின்னர் ஒரு மிக்ஸி ஜாரில் பெரிய வெங்காயம் சேர்த்து அரைத்து சாறு பிழிந்து டெட்டால் கலவையில் சேர்த்து நன்கு கலந்து விடவும். இதை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி வீட்டில் பல்லிகள் நடமாட்டம் இருக்கும் பகுதிகளில் தெளித்தால் அதன் தொல்லை நீங்கும்.