அதிர்ஷ்ட லட்சுமி வீடு தேடி வர வீடெங்கும் செல்வம் பெருக ஒருமுறை இப்படி செய்யுங்கள்!!

Photo of author

By Divya

அதிர்ஷ்ட லட்சுமி வீடு தேடி வர வீடெங்கும் செல்வம் பெருக ஒருமுறை இப்படி செய்யுங்கள்!!

ஒருவர் வீட்டில் லட்சுமி தாயார் குடி அமர்ந்து விட்டார் என்றால் அந்த வீடு செல்வ செழிப்புடன் நிறைந்து இருக்கும் என்பது ஐதீகம். இதை தான் லட்சுமி கடாச்சம் என்று சொல்வார்கள். நம்மில் பலரும் இதற்காக தான் பல்வேறு பரிகாரங்கள், பூஜைகள் செய்து வருகிறோம்.ஆனால் சில ஆன்மீக வழிகளை தொடர்ந்து கடைபிடித்தால் லட்சுமி தாயார் நிரந்தரமாக வீட்டில் குடியிருப்பார்.

விரத நாளில் செய்ய வேண்டியவை: வெள்ளிக்கிழமை விரதம்..

சூரிய உதயத்திற்கு முன்னாள் எழுந்து வாசல் தெளித்து கோலம் போட வேண்டும். வீடு சுத்தமாக இருக்க வேண்டும். வியாழக்கிழமை மாலையே வீடுகளை சுத்தம் செய்துவிட வேண்டும்.

வீட்டில் மஹாலட்சுமி படம் இருந்தால் இந்த பூஜையை மிகவும் எளிய முறையில் செய்து லட்சுமி தேவியின் அருளைப் பெறலாம்.

வீட்டில் உள்ள மஹாலட்சுமி படத்தை நன்றாக துடைத்து தேவிக்கு பிடித்த மல்லிகை, முல்லை, தாமரை, துளசி போன்ற ஏதாவது மலரை சாத்த வேண்டும்.

பிறகு லட்சுமி தேவிக்கு விருப்பமான நெய் தீபமேற்றி மஹாலட்சுமி பாடல்களை பாராயணம் செய்து நைவேத்யம் வைத்து வழிபட வேண்டும். மனதில் பக்தி, பரவசத்துடன் பூஜை தட்டில் கற்பூரம் ஏற்றி கடவுள் படங்களுக்கு மஞ்சள், குங்குமம், பூ வைத்து வழிபட்டால் லட்சுமி கடாட்சம் கிடைக்கும்.