சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் மனித இனத்தை அழித்து வருகிறது. ஆனால் சீனாவில் இயல்பு நிலைக்கு திரும்பிய நிலையில் மீண்டும் அங்கு பிரச்சினை எழுந்துள்ளது. இந்த வைரஸ் முதன் முதலில் உகான் நகரில்தான் தோன்றியது. அங்கு கொரோனாவில் இருந்து மீண்டுள்ள 100 பேரை உகான் பல்கலைக்கழகத்தின் ஜாங்னான் ஆஸ்பத்திரி கடந்த ஏப்ரல் மாதம் முதல் கண்காணித்து வந்தது. இந்த 100 பேரில் 90 பேர் நுரையீரல் சேதம் அடைந்திருப்பது தெரிய வந்துள்ளது. டாக்டர் பெங் ஜியோங் தலைமையிலான குழுவினர்தான் இந்த ஆய்வை நடத்தி உள்ளனர். மேலும் கொரோனா பாதித்து மீண்ட 65 வயதுக்குட்பட்டோரில் 10 சதவீதம்பேரின் உடலில் நோய் எதிர்ப்பு பொருள் (ஆன்டிபாடி) மறைந்து விடுவதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.