மக்களுக்கு ஓர் நற்செய்தி! ரிசர்வ் வங்கியின் அறிவிப்பு..!!

0
77

வங்கிகளில் அடகு வைக்கும் தங்கத்தின் மதிப்பில் 90% பணம் கடனாக வழங்கப்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

டெல்லி: ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் தலைமையில் ரிசர்வ் வங்கியின் நாணய கொள்கைக் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நாணயக் கொள்கைக் குழுவின் உறுப்பினர்கள் கலந்துகொண்டு வட்டி விகிதம் குறித்து ஆலோசனை நடத்தினர்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் தற்போதைய சந்தை நிலவரம், நாட்டின் பணவீக்கம் உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. பிற்பகலில் நிறைவடைந்த ஆலோசனைக் கூட்டத்தின் இறுதியில் ரிசர்வ் வங்கியின் நாணய கொள்கைக் குழு தனது கொள்கை முடிவை வெளியிட்டது.

அதில், ரெப்போ வட்டி விகிதம் 4% தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதத்திலும் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. இதன்மூலம் ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதம் எந்த மாற்றமும் இல்லாமல் 3.3% தொடர்கிறது.

ரெப்போ வட்டி விகிதம் மாற்றம் இல்லாததால் வங்கிகளில் வழங்கப்பட்டுள்ள வீடு மற்றும் வாகனங்களுக்கான வட்டி விகிதத்தில் எந்த வித மாற்றமும் ஏற்ப்படாது.

மேலும், வேளாண்மை அல்லாது பிற தேவைகளுக்காக வங்கிகளில் அடகு வைக்கப்படும் தங்க நகைகளின் மதிப்பில் 75% தற்போது கடனாக தரப்படுகிறது.

கொரோனாவால் ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழலை கருத்தில் கொண்டு 2021, மார்ச் 31ம் தேதி வரை நகைகளின் மதிப்பில் 90% வரை கடனாக கொடுக்க அனுமதி வழங்கப்படுகிறது என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் கூறினார்.

நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி குறையும் என்பதை உறுதிப்படுத்திய சக்திகாந்த தாஸ், கடந்த ஏப்ரலுக்கு பிறகு தொழிற்துறை வளர்ச்சி பாதையில் பயணிப்பதாக கூறினார்.

author avatar
Parthipan K