காவல் நிலையத்தில் இருந்து திருடப்பட்ட லக்ஜுவரி பைக்குகள் – பாய்ந்தது சஸ்பெண்ட் நடவடிக்கை!!

0
213
#image_title

காவல் நிலையத்தில் இருந்து திருடப்பட்ட லக்ஜுவரி பைக்குகள் – பாய்ந்தது சஸ்பெண்ட் நடவடிக்கை!!

விபத்துகள், போக்குவரத்து விதிமீறல் உள்ளிட்ட குற்ற வழக்குகளில் சிக்கும் பைக்குகள் காவல்துறையினரால் கைப்பற்றப்படுவது வழக்கம். அவ்வாறு கைப்பற்றப்படும் வண்டிகள் அனைத்தும் காவல்துறை பாதுகாப்பில் வைக்கப்பட்டிருக்கும். சம்மந்தப்பட்டோர் விதிமுறைப்படி நீதிமன்றம் மூலம் அவர்களது வாகனங்களை திரும்ப பெறுவர். இதில் சிலர் வாகனங்களை திரும்ப பெறும் முயற்சியினை மேற்கொள்ளாமல் அதனை அப்படியே விட்டு விடுகிறார்கள். இதன் காரணமாக காவல்நிலையத்தில் பல்வேறு வாகனங்கள் நிறுத்தப்பட்டிருப்பதை நாம் காணலாம். ஒரு காலகட்டத்திற்கு பிறகு அந்த வாகனங்கள் அனைத்தும் ஏலம் விடப்படும்.

வாகன கணக்கெடுப்பில் சிக்கிய காவலர்கள்

இதன்படி, விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருக்கும் இரு சக்கர வாகனங்களை சட்டப்படி அகற்றுமாறு உயரதிகாரிகள் உத்தரவிட்டதாக தெரிகிறது. எனவே வாகனங்களை கணக்கெடுக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. அப்போது சில வாகனங்கள் காணாமல் போயிருப்பது தெரிய வந்துள்ளது. இதனால் அதிர்ந்த காவலர்கள் அப்பகுதியில் வைக்கப்பட்டிருக்கும் சிசிடிவி பதிவுகளை பார்த்துள்ளனர். அதில், காவல்நிலையத்தில் இருந்து ஓர் மினி லாரி மூலம் பைக்குகளை ஏற்றும் காட்சி ஒன்று பதிவாகியிருந்தது. இந்த தகவல் காவல்துறை உயரதிகாரிகள் கவனத்திற்கு எடுத்து செல்லப்பட்டது.

விசாரணையில் சிக்கிய 3 காவலர்கள்

சிசிடிவி ஆதாரங்களை கொண்டு உயரதிகாரிகள் தங்கள் விசாரணையினை துவங்கினர். அதன் முடிவில் இந்த திருட்டில் 3 காவலர்கள் ஈடுபட்டிருப்பதும், திருடப்பட்ட விலை உயர்ந்த லக்ஜுவரி பைக்குகள் அப்பகுதியில் உள்ள ஓர் மெக்கானிக் ஷாப்பில் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதும் தெரிய வந்துள்ளது. இதனை தொடர்ந்து இதில் சம்மந்தப்பட்ட மணி, ஜெகன் சத்திய பிரபு உள்ளிட்ட 3 காவலர்கள் உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் சற்று சலசலப்பினை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleகொடைக்கானல் குணா குகைக்கு படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்-அத்துமீறிய 3 பேர் கைது!!
Next articleதமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு ஓர் நற்செய்தி – அகவிலைப்படி உயர்வு!!