நரை முடியை கருமையாக மாற்ற உதவும் மேஜிக் ஹேர் டை ஆயில் – தயார் செய்வது எப்படி?

Photo of author

By Divya

நரை முடியை கருமையாக மாற்ற உதவும் மேஜிக் ஹேர் டை ஆயில் – தயார் செய்வது எப்படி?

இன்றைய உலகில் பெரும்பாலனோர் நரைமுடி பாதிப்புக்கு ஆளாகி இருக்கின்றனர். சிறுவர்கள், இளம் வயதினர் என்று அனைவரும் இந்த பாதிப்பால் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இந்த நரை முடியை கருமையாக்க வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து ஹேர் டை ஆயில் தயார் செய்து பயன்படுத்தலாம். இதனால் எந்த ஒரு பக்க விளைவுகளும் ஏற்படாது.

தேவையான பொருள்கள்:-

*அவுரி இலை – 1 கப்

*மருதாணி இலை – 1/2 கப்

*கரிசலாங்கன்னி – 1/2 கப்

*வேப்பிலை – 1/4 கப்

*நெல்லிக்காய் – 5

*சின்ன வெங்காயம் – 5

*செம்பருத்தி இலை – 1/4 கப்

*கறிவேப்பிலை – 1/4 கப்

*வெந்தயம் – 1 தேக்கரண்டி

*கருஞ்சீரகம் – 1 தேக்கரண்டி

*ஆவாரம்பூ – 1 தேக்கரண்டி

*ரோஜா இதழ் – 1 தேக்கரண்டி

*வெட்டிவேர் – 1 தேக்கரண்டி

*தேங்காய் எண்ணெய் – 3 லிட்டர்

செய்முறை:-

முதலில் நெல்லிக்காய் மற்றும் வெங்காயத்தை அரைத்து வடிகட்டி சாறை எடுத்துக்கொள்ளவும்.

அடுத்து அடுப்பில் ஒரு கடாய் வைத்து தேங்காய் எண்ணெயில் பாதி அளவில் ஊற்றி சூடேற்றவும். பின்னர் அதில் அரைத்து வைத்துள்ள சாற்றை ஊற்றவும்.

பின்னர் அவுரி இலை, கரிசலாங்கன்னி இலை, வேப்பிலை, மருதாணி, செம்பருத்தி இலை ஆகியவற்றை அரைத்து சூடேரிக் கொண்டிருக்கும் எண்ணெய்யில் சேர்த்துக் கொள்ளவும்.

அடுத்து வெந்தயம், கருஞ்சீரகம், ஆவாரம்பூ, வெட்டிவேர், ரோஜா இதழ் ஆகியவற்றை பொடியாக்கி அதில் சேர்த்துக் கொள்ளவும். இறுதியில் மீதமுள்ள தேங்காய் எண்ணெய்யில் இதனை ஊற்றி காய்ச்சி அடுப்பை அணைத்துக் கொள்ளவும்.

இதை நன்கு ஆறவிட்டு ஒரு பாட்டிலில் ஊற்றி சேமித்து வைத்துக் கொள்ளவும். இந்த ஹெர்பல் ஹேர் டை ஆயிலை தேவையான அளவு எடுத்து தலை முழுவதும் அப்ளை செய்து கொள்ளவும். பின்னர் 1 மணி நேரம் கழித்து மைல்டான ஷாம்பு பயன்படுத்தி தலைக்கு குளிக்கவும்.