கருத்துப்போன வெள்ளி பொருட்களை 2 நிமிடத்தில் பளிச்சிட வைக்கும் மேஜிக்..!

0
242
#image_title

கருத்துப்போன வெள்ளி பொருட்களை 2 நிமிடத்தில் பளிச்சிட வைக்கும் மேஜிக்..!

அனைவரது வீட்டிலும் கொலுசு, தோடு, பூஜை பொருட்கள் என்று வெள்ளியால் ஆன பொருட்கள் இருக்கும். இவ்வாறு உள்ள பொருட்கள் நாம் காற்றுபடும் படியாக இருந்தால் அவை விரைவில் கருத்து விடும்.

இந்த கருத்து போன வெள்ளி பொருட்களை செலவின்றி புதிது போன்று பளபளப்பாக மாற்ற கீழே கொடுக்கப்பட்டுள்ள ட்ரிக்கை பயன்படுத்தவும்.

*வாஷிங் பவுடர்
*பேக்கிங் சோடா
*தண்ணீர்

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 1 ஸ்பூன் வாஷிங் பவுடர் மற்றும் 1 ஸ்பூன் பேக்கிங் சோடா சேர்த்து 1 கிளாஸ் தண்ணீர் ஊற்றவும். இதில் கருத்த வெள்ளி பொருட்களை போட்டு சில நிமிடங்கள் கொதிக்க விடவும்.

பிறகு ஒரு கிண்ணத்தில் அந்த வெள்ளி பொருட்களை போட்டு குளிர்ந்த நீர் ஊற்றி பிரஷ் கொண்டு சுத்தம் செய்யவும். இவ்வாறு செய்தால் வெள்ளி பொருட்கள் பளிச்சிடும்.

*அலுமினியம் பாயில்
*சோடா உப்பு

அடுப்பில் ஒரு அகலமான பாத்திரம் வைத்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி சிறிது அலுமியம் பாயில் மற்றும் சோடா உப்பு சேர்த்து கலந்து விடவும்.

பிறகு அதில் கருத்து போன வெள்ளி பொருட்களை போட்டு சிறிது நேரம் தண்ணீரை கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும்.

பிறகு தண்ணீரில் உள்ள வெள்ளி பொருட்களை எடுத்தால் கடையில் வாங்கிய புது வெள்ளி போல் பளிச்சிடும்.