வெந்தயம் கருஞ்சீரகம் ஓமம் மூன்றையும் பொடி செய்து சாப்பிடுங்க! இதனால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன? 

0
888
வெந்தயம் கருஞ்சீரகம் ஓமம் நன்மைகள்
வெந்தயம் கருஞ்சீரகம் ஓமம் நன்மைகள்
வெந்தயம் கருஞ்சீரகம் ஓமம் மூன்றையும் பொடி செய்து சாப்பிடுங்க! இதனால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?
தற்பொழுது உள்ள காலத்தில் நாம் ஆரோக்கியம் இருக்க வேண்டும் என்றால் சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். ஆனால் அதை தவிர்த்து விட்டு பணம் கொடுத்து ஆரோக்கியத்திற்கு தேவையான உணவுகளை வாங்கி சாப்பிடும் நிலைமைக்கு தற்பொழுது ஆளாகி விட்டோம்.
நமது ஆரேக்கியத்திற்கு தேவையான அனைத்து உணவுகளும் நமது சமையல் அறைக்குள்ளேயே இருக்கின்றது. அதில் முக்கியமான பொருள்கள் வெந்தயம், கருஞ்சீரகம், ஓமம் ஆகிய மூன்று பொருட்கள் ஆகும்.
வெந்தயம் கருஞ்சீரகம் ஓமம்  நன்மைகள்
வெந்தயம் கருஞ்சீரகம் ஓமம் நன்மைகள்
இந்த மூன்று பொருட்களை பொடி செய்து தினமும் சாப்பிட்டு வரும் பொழுது உடலுக்கு பலவிதமான நன்மைகள் கிடைக்கின்றது. இந்த கருஞ்சீரகம், வெந்தயம், ஓமம் மூன்றையும் எவ்வாறு பயன்படுத்துவது என்பது பற்றியும் இதன் மூலமாக கிடைக்கும் நன்மைகள் பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.
செய்முறை:
வெந்தயம் 200 கிராம் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் கருஞ்சீரகம் மற்றும் ஓமம் இரண்டையும் தலா 100 கிராம் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர்  அடுப்பை பற்ற வைத்து அதில் வாணலி வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் இதில் வெந்தயம், கருஞ்சீரகம், ஓமம் மூன்றையும் மேற்சொன்ன அளவு எடுத்து வாணலியில் சேர்த்து வறுத்துக் கொள்ள வேண்டும். பின்னர். இதை மிக்சி ஜாகிர் போட்டு அரைத்து பொடியாக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் இந்த பொடியை காற்று புகாத டப்பாவில் போட்டு வைத்துக் கொள்ள வேண்டும்.
இந்த பொடியை தினமும் இரவு படுக்க செல்லும் முன்பு ஒரு ஸ்பூன் எடுத்து சாப்பிட வேண்டும். பின்னர் சுடு தண்ணீர் குடிக்க வேண்டும். இதை சாப்பிட்ட பிறகு எந்த உணவையும் சாப்பிடக்கூடாது. தொடர்ந்து மூன்று மாதங்கள் இதை சாப்பிட்டு வந்தால் உடல் நிலையில் நல்ல பலன் கிடைக்கும்.
இதை சாப்பிடும் பொழுது கிடைக்கும் நன்மைகள்…
* இந்த பொடியை சாப்பிட்டு வரும் பொழுது உடலில் உள்ள அனைத்து நச்சுக்களும் வெளியேறி விடும்.
* இந்த பொடி கெட்ட கொழுப்புகளை கரைத்து வெளியேற்றி உடல் எடையை குறைக்க உதவுகின்றது.
* இதை சாப்பிடும் பொழுது எலும்புகள் தேய்மானம் ஆவது தடுக்கப்படுகின்றது. மேலும் எலும்புகளுக்கு வலிமை சேர்க்கின்றது.
* பல் பிரச்சனைகளை சரி செய்ய இந்த பொடி உதவியாக இருக்கும்.
* இந்த பொடியை தொடர்ந்து சாப்பிடும் பொழுது சருமத்தில் உள்ள சுருக்கங்கள் நீங்கி சருமம் மினுமினுப்பாகும்.
* மலச்சிக்கல் பிரச்சனையை தீர்க்க இந்த பொடியை சாப்பிடலாம்.
* முடி வளர்ச்சி சீராக இருக்க வேண்டும் என்றால் இந்த பொடியை தயார் செய்து மூன்று மாதங்கள் மட்டும் சாப்பிட வேண்டும்.
* சர்க்கரை நோய் உள்ளவர்கள் இந்த பொடியை சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தலாம்.
*  பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் பிரச்சனையை குணப்படுத்தலாம் இந்த பொடி உதவியாக இருக்கும்.
இந்த பொடியை மூன்று மாதங்கள் மட்டும் தான் சாப்பிட வேண்டும். மூன்று மாதங்களுக்கு மேல் சாப்பிடக்கூடாது. அவ்வாறு சாப்பிட்டால் உடலுக்கு பல தீமைகள் ஏற்படும்.
Previous articleIOB வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு! மாதம் ரூ.70,000/-சம்பளத்தில் வேலை! இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க
Next articleபெண்களின் பிறப்புறுப்பில் ஏற்படும் அரிப்பு பிரச்சனை!!! இதை சரி செய்ய சில இயற்கையான வழிமுறைகள் இதோ!!!