சளி மற்றும் காய்ச்சல் பாதிப்பில் இருந்து விடுபட “துளசி சாதம்” செய்து சாப்பிடுங்கள்!!

Photo of author

By Divya

சளி மற்றும் காய்ச்சல் பாதிப்பில் இருந்து விடுபட “துளசி சாதம்” செய்து சாப்பிடுங்கள்!!

நம்மில் பெரும்பாலானோரை எளிதில் பாதிக்கும் நோய்கள் சளி,இருமல்,காய்ச்சல் ஆகும்.இதற்கு காரணம் மாறி வரும் பருவ நிலை,உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைதல்,ஆரோக்கியமற்ற உணவு,சுத்தமற்ற தண்ணீர் ஆகும்.

முதலில் சளி பாதிப்பு ஏற்பட்டு பின்னர் இருமல்,காய்ச்சல் ஏற்பட்டு விடுகிறது.இவை குணமாக சில நாட்கள் எடுத்துக் கொள்ளும்.இந்த பாதிப்பை விரைவில் சரி செய்ய துளசி இலை பெரிதும் உதவும்.

துளசி இலைகளில் பச்சை துளசி,கருந்துளசி,சீனி துளசி என்று பல வகைகள் இருக்கிறது.இந்த துளசிகளில் இரும்பு சத்து,நார் சத்து,வைட்டமின் ஏ,மற்றும் டி அதிகளவில் இருக்கிறது.இதில் பச்சை துளசியை கொண்டு சுவையான சாதம் செய்து சாப்பிட்டால் சளி மற்றும் காய்ச்சல் பாதிப்பு விரைவில் சரியாகும்.

தேவையான பொருட்கள்:-

*துளசி – 1/2 கப்

*வடித்த சாதம் – 1 கப்

*எண்ணெய் – தேவையான அளவு

*கடலைப்பருப்பு – 1 தேக்கரண்டி

*உளுந்தம் பருப்பு – 1 தேக்கரண்டி

*கடுகு – 1 தேக்கரண்டி

*பச்சை மிளகாய் – 2

*வெங்காயம் – 1(நறுக்கியது)

*கருவேப்பிலை – 1 கொத்து

*கொத்தமல்லித்தழை – சிறிதளவு

செய்முறை:-

முதலில் ஒரு பாத்திரம் எடுத்து அதில் 1/2 கப் துளசி இலைகளை போட்டுக் கொள்ளவும்.பின்னர் அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி சுத்தப்படுத்திக் கொள்ளவும்.இதை ஒரு தட்டிற்கு மாற்றி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

அடுத்து எடுத்து வைத்துள்ள வெங்காயம்,பச்சை மிளகாய் உள்ளிட்டவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

அடுப்பில் கடாய் வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றிக் கொள்ளவும்.அவை சூடேறியதும் அதில் 1 தேக்கரண்டி கடுகு,1 தேக்கரண்டி உளுந்து பருப்பு,1 தேக்கரண்டி கடலைப்பருப்பு மற்றும் 1 கொத்து கறிவேப்பில்லை சேர்த்து தாளித்து பொரிய விடவும்.

பின்னர் நறுக்கி வைத்துள்ள பெரிய வெங்காயம்,பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.
அடுத்ததாக சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துள்ள துளசி இலையை சேர்த்து ஒரு கிளறு கிளறி தேவையான அளவு உப்பு மிதமான தீயில் 5 நிமிடம் வரை வேக விடவும்.

துளசி நன்கு வெந்து வந்ததும் வடித்து வைத்துள்ள 1 கப் சாதத்தை சேர்த்து கிளறவும். விருப்பப்பட்டால் சிறிதளவு நறுக்கிய கொத்தமல்லி தழைகளை சேர்த்துக் கொள்ளலாம்.