பழைய தோசைக்கல்லை புதுசாக்கும்.. மேஜிக் ட்ரிக்ஸ்..!

0
255
#image_title

பழைய தோசைக்கல்லை புதுசாக்கும்.. மேஜிக் ட்ரிக்ஸ்..!

உங்களிடம் உள்ள பழைய பயன்படுத்த முடியாத தோசைக் கல்லை புதிது போன்று பளிச்சிட வைக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள சிம்பிள் ட்ரிக்கை பயன்படுத்துங்கள்.

பேக்கிங் சோடா
வாஷிங் லிக்விட்
பாத்திரம் துலக்கும் லிக்விட்
எலுமிச்சை சாறு
பேஸ்ட்

ஒரு கிண்ணத்தில் 1 ஸ்பூன் பல் துலக்க பயன்படுத்தும் பேஸ்ட், 1 ஸ்பூன் பேக்கிங் சோடா, 2 ஸ்பூன் எலுமிச்சை சாறு, 1 ஸ்பூன் வாஷிங் லிக்விட், 1 ஸ்பூன் பாத்திரம் துலக்கும் லிக்விட் சேர்த்து ஒரு ஸ்பூன் பயன்படுத்தி கலந்து விடவும்.

இவ்வாறு செய்வதால் அவை நுரையாக வரும். பிறகு பழைய கருகி, எண்ணெய் படிந்த தோசைக்கல்லை எடுத்துக் கொண்டு அதன் மீது தயாரித்த கலவையை ஊற்றி 15 நிமிடங்களுக்கு ஊற போடவும்.

பிறகு ஒரு தேங்காய் நார் கொண்டு அதை தேய்க்கும் பொழுது கல்லில் படிந்து கிடந்த எண்ணெய் பிசுக்கு, அழுக்கு முழுமையாக நீங்கி புதிது போன்று காட்சி தரும்.

பிறகு எப்பொழுதும் போல் தோசை வார்க்க பயன்படுத்திக் கொள்ளலாம்.

எலுமிச்சை சாறு
உப்பு

சுத்தம் செய்ய போகும் தோசைக் கல்லை வைத்து சூடாக்கவும். பிறகு தோசைக் கல் மீது தேவையான அளவு எலுமிச்சை சாறு மற்றும் உப்பு சேர்த்துக் கொள்ளவும். அடுத்து சிறிது தண்ணீர் சேர்த்து ஒரு ஸ்க்ரப்பர் கொண்டு தேய்த்துக் கொள்ளவும்.

இவ்வாறு தொடர்ந்து 5 நிமிடங்களுக்கு தேய்க்கவும். பிறகு அடுப்பை அணைத்து தோசைக் கல்லை இறக்கி கொள்ளவும்.

பிறகு பாத்திரம் துலக்க பயன்படுத்தும் லிக்விட் ஒரு ஸ்பூன் அளவு தோசைக் கல்லில் சேர்த்து தேய்த்து சுத்தம் செய்யவும். இவ்வாறு செய்தால் பழைய தோசைக் கல் தோசை வார்க்கும் நிலைக்கு வந்துவிடும்.