மங்காத்தா 2 குறித்த சுவாரசியமான தகவல்!

0
165

தனக்கென தனி ரசிகர் கூட்டங்கள் இருந்து கோலிவுட்டில் ஹீரோக்களாக வலம் வரும் நடிகர்கள் தங்களது 25,50,75,100 ஆவது படங்களை மிகச் சிறந்த கதை அம்சங்கள் கண்ட படமாக இருக்க வேண்டும் என்று எண்ணுவர். அப்படிப்பட்ட வெற்றியை தான் அவர்கள் எதிர்பார்ப்பார்கள்.

அவ்வகையில் நம் தல அஜித் அவர்கள் தன்னுடைய 50வது படத்தில் வில்லன் என்னும் கதாபாத்திரத்தில் நடித்து வித்தியாசமான கதைக்களம் கொண்டு எடுக்கப்பட்ட படம்தான் மங்காத்தா. இப்படம் மக்களிடம் நின்று பேசும் அளவிற்கு நல்ல வெற்றி பெற்றது. இப்படத்தை வெங்கட் பிரபு இயக்கினார்.

மேலும் இப்படத்தில் த்ரிஷா,ஆக்க்ஷன் கிங் அர்ஜுன், அஞ்சலி, ஆண்ட்ரியா, பிரேம்ஜி, மேடம் பல நட்சத்திரங்களும் நடித்தனர். இப்படம் ஆகஸ்ட் 31ஆம் தேதி 2011 ஆம் ஆண்டு வெளியானது.

இப்படம் மக்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று நல்ல பாராட்டையும் பெற்றது. அதுமட்டுமல்லாமல் இப்படம் வித்தியாசமான சவாலான கதைக்களத்தை கொண்டு அமைந்தது.

இது ரசிகர்கள் மத்தியில் இப்படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வரும் என்பது குறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால் இப்படத்திற்கான இரண்டாம் பாகம் குறித்த தகவல்கள் எந்த பிரபலங்களிடம் இருந்து வெளியாகவில்லை. ஆனால் இது அஜித் அவர்களே பதில் கூறவேண்டிய கேள்வி என்றும் கூறிவருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் சுப்பு பஞ்சு ஒரு பேட்டியில் 8 வருடத்திற்கு முன்பே வெங்கட் பிரபு அவர்கள் மங்காத்தாவின் இரண்டாம் பாகத்திற்கு உண்டான கதையை எழுதிவைத்து விட்டார். தல அஜித் அவர்கள் சம்மதம் தெரிவித்தால் போதும், எப்போது வேண்டுமானாலும் படத்திற்கான பணிகளை மேற்கொள்ளலாம் என்று கூறியுள்ளார்.

Previous articleதிமுக நிர்வாகிகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள ரஜினிகாந்த்: அரசியல் ஆதாயம் உள்ளதா?
Next articleஅண்ணா பல்கலைக்கழகம் நிறுவப்பட்டு இன்றுடன் 42 வருடங்கள் முடிகிறது!!