கோவை மாவட்டத்தில் வேளாண்மை பல்கலைக்கழகத்தில் படித்து வந்த இளம்பெண் மாயம்! போலீசார் தீவிர விசாரணை!

0
166
Mayam, a young girl who was studying at the Agricultural University in Coimbatore! Police serious investigation!
Mayam, a young girl who was studying at the Agricultural University in Coimbatore! Police serious investigation!

கோவை மாவட்டத்தில் வேளாண்மை பல்கலைக்கழகத்தில் படித்து வந்த இளம்பெண் மாயம்! போலீசார் தீவிர விசாரணை!

கோவை மாவட்டம் வடவள்ளி சாலையில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது. அந்த கல்லூரியில் சேலம் மாவட்டம் ஆத்தூர் தாலுகாவை சேர்ந்த மாணவி பிஎஸ்சி முதலாம் ஆண்டு பயின்று வரும் மாணவி முத்துலட்சுமி (19).  அவர் கல்லூரி விடுதியில் தங்கி பயின்று வருகிறார். அந்த விடுதியில் தினந்தோறும் மாணவிகளின் வருகையை பரிசோதனை செய்து வருவார்கள்.

மேலும் அந்த வகையில் நேற்று இரவு 7 மணி அளவில் மாணவிகளின் வருகையை விடுதி கண்காணிப்பாளர் பிரபாகரன் பரிசோதனை செய்தார். அப்போது மாணவி முத்துலட்சுமி காணாமல் போனது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து ஆர் எஸ் புரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் பேரில்  போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவி முத்துலட்சுமியை தேடி வருகின்றனர்.  மேலும் மாணவியை யாரேனும் கடத்தி விட்டார்களா அல்லது இவரே மாயமாகிவிட்டாரா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றார்கள்.

Previous articleஎடப்பாடி அருகே மரச்சாமான் கடையில் திடீர் தீ விபத்து!..பல லட்ச மரச்சாமான் பொருட்கள் எரிந்து நாசம்..நடந்தது என்ன?
Next article அழுகிய  நிலையில் துர்நாற்றத்துடன் மீட்கப்பட்ட பெண் சடலம் !.இந்த பெண் யார்? போலீசார் தீவிர விசாரணை !..