பிறரை சந்திக்கும் போது எப்படி நடந்து கொள்ள வேண்டும்..? சின்ன சின்ன டிப்ஸ்!!

0
178

பிறரை சந்திக்கும் போது எப்படி நடந்து கொள்ள வேண்டும்..? சின்ன சின்ன டிப்ஸ்!!

  • பிறருடன் பேசும்போது அவரது கண்களைப் பார்த்து பேசுங்கள். குற்ற உணர்வு உள்ளவர்கள்தான் பார்வையை தாழ்த்திக் கொண்டோ அல்லது வேறு திசையை பார்த்தோ பேசுவார்கள்.
  • மற்றவருடன் கை குலுக்கும் போது உங்கள் கைகளில் உறுதி தெரியட்டும். இது உங்கள் மீதான நம்பிக்கையை அதிகரிக்கும்.
  • உங்களைவிட வயது குறைந்தவர்களை பெயர் சொல்லி அழைப்பது உங்கள் மீதான நெருக்கத்தை அதிகரிக்கும்.
  • உங்களுக்கு நெருக்கமான நபராக இருந்தாலும் அவரது தனிப்பட்ட கேரக்டரை விமர்சிக்க வேண்டாம். சிலர் இதை விரும்புவதில்லை.
  • யாரை சந்தித்தாலும் சிறு புன்னகையோடு பேசுங்கள். சிரித்த முகமே நீங்கள் வெற்றி பெறுவதற்கான அடையாளம்.
  • பிறரிடம் தேவையற்ற கோபத்தை காட்டாமல் அன்பாக பேசி உங்கள் வேலையை முடித்துக் கொள்ளுங்கள். இதுவே சரியான வழி.
  • பலருக்கு முன்னால் உங்களை திட்டினால் கோபம் வரும்தானே, அதனால் மற்றவரையும் பலர் முன்பு திட்டாதீர்கள். தனியே சந்திந்து பொறுமையாக எடுத்து கூறுங்கள்.
  • நல்ல உடைகளை அணிந்து கொண்டு வெளியே செல்லுங்கள், வேலைக்கு செல்லும் நேரத்தில் பேண்ட், சர்ட் டக் இன் செய்ய வேண்டியது அவசியமான ஒன்று.
  • சந்திக்கும் நபரை நீ , வா, போ என ஒருமையில் பேசாமல் வாங்க, போங்க அல்லது சார், மேடம் என்று அழைத்தால் உங்கள் சந்திப்பு இனியதாக இருக்கும்.

குறிப்பு : எப்போதும் நீங்கள் நீங்களாகவே இருங்கள். உங்கள் மீது தவறு இருந்தால் திருத்திக் கொள்ளுங்கள். யாருக்காகவும் உங்களுடைய இயற்கையான குணத்தை மாற்றிக் கொள்ள வேண்டாம்.

Previous articleஹிட் கொடுத்த இயக்குனருடன் மீண்டும் கைகோர்த்த சந்தானம் : பூஜையுடன் தொடக்கம் !
Next article175 கி.மீ வேகத்தில் பந்துவீசி வியக்க வைத்த இலங்கை வீரர்:17 வருட சாதனை முறியடிப்பு !