ரசிகர்கள் இடையே மிகுந்த வரவேற்பை பெற்ற மெஸ்சியின் செயல்

Photo of author

By Parthipan K

கால்பந்து என்றாலே நம் நினைவுக்கு வருவது ரனால்டோவும், லயோனல் மெஸ்சியும் தான். அர்ஜென்டினா அணியின் நட்சத்திர வீரரான மெஸ்சி பார்சிலோனா கிளப் அணியில் விளையாடி வந்தார். இந்த நிலையில் இலவச பரிமாற்றத்தின் அடிப்படையில் வெளியேற விருப்பம் தெரிவித்து இருந்தார். ஆனால் அதற்கு கிளப் நிர்வாகம் சம்மதிக்காததால் இழுபறி நீடித்த நிலையில் வரும் சீசனில் பார்சிலோனா அணிக்காக தொடர்ந்து விளையாடுவேன் என்று சம்மதம் தெரிவித்தார். இதனால் ரசிகர் அனைவரும் உற்சாகத்தில் இருந்தனர். இந்த பிரச்சினை காரணமாக சில நாட்களாக பார்சிலோனா அணியின் பயிற்சி முகாமுக்கு செல்லாமல் இருந்த மெஸ்சி நேற்று பயிற்சியில் பங்கேற்றார்.