மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை கூட விட்டு வைக்காத காமக்கொடூரன்! தர்மபுரியில் நடந்த அவலம்!

Photo of author

By Kowsalya

மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை கூட விட்டு வைக்காத காமக்கொடூரன்! தர்மபுரியில் நடந்த அவலம்!

Kowsalya

Updated on:

மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை கூட விட்டு வைக்காத காமக்கொடூரன்! தர்மபுரியில் நடந்த அவலம்!

தர்மபுரியில் பாலக்கோட்டில் மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த முதியவர் கைது ஆகியுள்ள சம்பவம் அங்கு மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தர்மபுரியை அடுத்த பாலக்கோடு பகுதியில் பூனையன் கொட்டாய் என்ற பகுதியை சேர்ந்தவர் மனோகரன். இவருக்கு வயது 60 ஆகின்றது. இவர் ஆடு மேய்க்கும் தொழிலை செய்து வருகின்றார். ஆடுகளை காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று மேய விட்டு மாலை வீடு திரும்புவது தான் இவரது வேலை.

சில தினங்களுக்கு முன்பு வழக்கம்போல் ஆடுகளை மேய்க்க சென்றுள்ளார் மனோகரன். அதே பகுதியை சேர்ந்த இன்னொரு இளம்பெண் தனது தந்தையுடன் ஆடு மேய்க்க சென்றுள்ளார். சம்பவத்தன்று அந்த இளம்பெண்ணின் ஆடுகள் வழிமாறி சென்று விட்டதால் அதனை ஓட்டி வருவதற்காக தந்தை மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை அங்கேயே உட்கார வைத்துவிட்டு ஆடுகளை ஓட்டி வருவதற்காக சென்றுள்ளார்.

தக்க சமயத்தை எதிர்பார்த்து கொண்டிருந்த மனோகரன் அந்த இளம் பெண் தனியாக இருப்பதை அறிந்து அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பாலியல் பலாத்காரம் செய்து விட்ட பின் தப்பி ஓடியுள்ளார்.

அந்த இளம் பெண்ணின் தந்தை அந்தப் பெண் அழுது கொண்டிருப்பதைப் பார்த்து என்னவாயிற்று என்று கேட்க அந்த மனநலம் குன்றிய பெண் நடந்தவற்றை முழுமையாக சொல்லியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த இளம்பெண்ணின் தந்தை அருகில் உள்ள பாலக்கோடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அவர் அளித்த புகாரின் பெயரில் அந்த முதியவரை போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் தான் பாலியல் பலாத்காரம் செய்ததை ஒப்புக் கொண்ட மனோகரனை வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.