ஊரடங்கு உத்தரவை மீறினால் கட்டாய சிறை! வெளிமாநிலத்தவரை விரட்டினால் கடும் நடவடிக்கை! -அமைச்சர் அதிரடி பேச்சு

0
143

ஊரடங்கு உத்தரவை மீறினால் கட்டாய சிறை! வெளிமாநிலத்தவரை விரட்டினால் கடும் நடவடிக்கை! -அமைச்சர் பேச்சு

கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் 21 நாட்களுக்கு போடப்பட்ட தேசிய ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. இது தொடர்பாக தமிழக அரசு பல்வேறு பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தாலும், ஏதாவது காரணங்களை கூறி பலர் இருசக்கர வாகனங்களில் உத்தரவை மதிக்காமல் பொதுவெளியில் சுற்றி வருவது அதிகரித்துள்ளது.

இந்நிலையில் கொரோனா தடுப்பு பற்றிய ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நடந்தது. இந்த கூட்டத்தில் தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கலந்துகொண்டார். பின்னர் கொரோனா ஆலோசனைகூட்டம் பற்றி செய்தியாளர்களிடம் கூறியதாவது;

கொரோனா வைரஸால் பொதுமக்கள் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வந்து வேலைபார்க்கும் நபர்களை கட்டாயமாக பேரில் விரட்டக்கூடாது மீறினால் சட்டப்படி கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும். இந்த இக்கட்டான சூழலை சுயநலமாக நினைத்து காய்கறி மற்றும் மளிகை கடைகளில் பொருட்களை அதிக விலைக்கு விற்றால் சட்டப்படி நடவடிக்கை பாயும் என்று கூறினார்.

மேலும், அரசின் ஊரடங்கு உத்தரவை பின்பற்றாதவர்கள் சமுதாயத்திற்கு எதிரான நபர்கள் என்றும், உத்தரவை மீறி இருசக்கர வாகனத்தில் வெளியில் சுற்றினால் 14 நாட்கள் தனிமை சிறையில் அடைக்கப்பட்டார் நேரிடும் என்றும் அதிரடியாக பேசியுள்ளார்.

Previous articleகொரோனா நோயாளிகளுக்கு உதவும் ரோபோக்களை வடிவமைத்த சென்னை இளைஞர்
Next articleBREAKING: கொரோனா வார்டில் சிகிச்சை பெற்றுவந்த கடலூர் பெண் உயிரிழப்பு!