கற்பழிப்பு புகாரில் கைதான திமுக முக்கிய புள்ளி… ஸ்டாலினை தாறுமாறாக கிழித்த அமைச்சர் தங்கமணி…!

Photo of author

By CineDesk

கற்பழிப்பு புகாரில் கைதான திமுக முக்கிய புள்ளி… ஸ்டாலினை தாறுமாறாக கிழித்த அமைச்சர் தங்கமணி…!

CineDesk

Updated on:

Stalin

அதிமுக, திமுக கட்சிகள் தங்களுடைய கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கும் சேர்த்து ஆதரவு தெரிவித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபடுகின்றனர். மக்களுக்கு செய்த, செய்யப்போகும் நலத்திட்ட உதவிகளை மட்டும் கூறாமல், ஒருவர் மீது ஒருவர் கூறும் குற்றச்சாட்டுக்களின் பட்டியலும் நீண்டு கொண்டே செல்கிறது. அப்படித்தான் செய்தியாளர்களைச் சந்தித்த மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி திமுக முக்கிய புள்ளியின் முகமூடியை கிழித்து தொங்கவிட்டுள்ளார்.

Rape

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் பரப்புரையில் ஈடுபட்ட மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி செய்தியாளர்கள் சந்திப்பின் போது, ‘ஜெயலலிதா மறைவுக்கு பின்னரும் 100 ஆண்டுகள் அதிமுக ஆட்சி அமைக்கும். திமுக ஆட்சிக்கு வந்தால் எப்படிப்பட்ட வன்முறைகள், அராஜகங்கள் நடக்கும் என்பது மக்களுக்கு நன்றாக தெரியும். இரண்டு நாட்களுக்கு முன்பு கூட திருச்செங்கோடு திமுக இளைஞரணியைச் சேர்ந்த சதீஷ் என்பவர் வேலைக்கு சென்ற பெண்ணை வழிமறித்து பாலியல் பலாத்காரம் செய்ததால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

ஆட்சிக்கு வரும் முன்பே இப்படி அராஜகம் செய்பவர்கள் ஆட்சிக்கு வந்தால் எப்படி இருக்கும் என சிந்தித்து வாக்களியுங்கள். மணல் அள்ளுவதை தடுத்தால் எனக்கு போன் போடுங்கள், அந்த அதிகாரி அங்கு பணியில் இருக்க மாட்டார் என செந்தில் பாலாஜி இப்போதே மிரட்டுகிறார் என சகட்டு மேனிக்கு திமுகவை சாடினார்.